Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன சார் நியாயம் இது” ரகானே வாய்ப்பு குறித்து கே.எல்.ராகுல் பேச்சு..அதிர்ச்சியில் 2 இளம் வீரர்கள்

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரகானே விளையாடுவதை கே.எல்.ராகுல் உறுதி செய்துள்ளார். ஆனால் மற்றொரு சிக்கலும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுவரை ஒருமுறை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பதால் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா விலகியதால், ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்குவது உறுதியாகியுள்ளது. முதல் விக்கெட்டிற்கு சட்டீஸ்வர் புஜாரா களமிறங்குகிறார். அதன்பின்னர் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர்.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

இந்நிலையில் மிடில் ஆர்டரில் எந்த வீரரை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் நீடித்தது. சீனியர் வீரர் அஜிங்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய 3 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ரகானேவின் ஃபார்ம் மோசமாகவுள்ளதால் அவரை ப்ளேயிங் 11ல் சேர்க்காமல் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனத்தகவல் வெளியானது.

கே.எல்.ராகுல் பேட்டி

கே.எல்.ராகுல் பேட்டி

இந்நிலையில் ரகானே கண்டிப்பாக விளையாடுவார் என்பது போல துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது மிகவும் கடினமான முடிவு. இந்தியாவுக்காக மிக முக்கியமான நேரங்களில் சிறப்பாக ஆடிக் கொடுத்தவர் ரகானே. மெல்பேர்ன், லார்ட்ஸ் டெஸ்ட்கள் அதற்கு உதாரணம். அவர் எங்களின் முக்கிய வீரர் ஆகும். ஸ்ரேயாஸ் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளனர். எனினும் அதுகுறித்து இன்று அல்லது நாளைக்குள் முடிவெடுப்போம்.

7வது வீரர்

7வது வீரர்

அணியின் 7வது வீரராக முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்குவதா அல்லது ஆல்ரவுண்டரை களமிறக்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் ஷர்துல் தாக்கூரை சேர்த்துக்கொண்டால் பவுலிங் மற்றும் நீண்ட பேட்டிங் வரிசை கிடைக்கும்.

Recommended Video

அடுத்து பயிற்சியாளர் பொறுப்பு? விரைவிலேயே Retirement-ஐ அறிவிக்க போகும் Harbhajan Singh?
முழு நேர பேட்ஸ்மேன்

முழு நேர பேட்ஸ்மேன்

இது ஒருபுறம் இருக்க, முழு நேர பேட்ஸ்மேனை களமிறக்கலாம் என்ற பேச்சுக்களும் உள்ளன. பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய 3 பேரே வேகப்பந்துவீச்சுக்கு போதும் என்றால் கூடுதல் பேட்ஸ்மேனை வைத்துக்கொள்ளலாம். அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் ஹனுமா விஹாரி அல்லது ரகானேவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் தற்போது கூடுதல் பேட்ஸ்மேனா அல்லது ஆல்ரவுண்டரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

Story first published: Friday, December 24, 2021, 18:35 [IST]
Other articles published on Dec 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+