
முக்கிய டெஸ்ட் போட்டி
தென்னாப்பிரிக்க தொடரானது இந்திய அணியின் சீனியர் வீரருக்கு ஒரு பலப்பரீட்சை என்றே கூற வேண்டும். அஜிங்கியா ரகானே, புஜாரா ஆகியோர் தங்களை நிரூபிக்க இதுவே கடைசி வாய்ப்பாகும். இதே போல விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன்சியை காப்பாற்றிக் கொள்ளும் போட்டியாகவும் இது அமையவுள்ளது. இந்த போட்டியில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுப்பார் எனக்கூறப்படுகிறது.

கோலிக்கு காத்துள்ள சாதனை
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் விராட் கோலிக்கு முக்கிய சாதனையாக இருக்க போவது தெரியவந்துள்ளது. விராட் கோலி, இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்களை குவித்துள்ளார். அதில் 27 சதங்களும், 27 அரை சதங்களும் அடங்கும். அவர் இன்னும் 199 ரன்களை இந்த தொடரில் அடிக்கும் பட்சத்தில் 8,000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைப்பார்.

ரெக்கார்ட்கள்
விராட் கோலிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ் லட்சுமணன், சேவாக் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியால் கூட இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. எனவே அவரை முந்தி கோலி தான் பெஸ்ட் என நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
Recommended Video

கம்பேக் கொடுப்பாரா?
கேப்டன் விராட் கோலி, கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக 2019ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் 21 இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை கூட கோலி விளாசவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்க தொடரில் , தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நிச்சயம் அவர் மீண்டும் வருவார் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications