Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அட இத பாருங்கப்பா” இந்தியா - தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?- அலசல்

செஞ்சூரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

நியூசிலாந்து அணியை சுளுக்கெடுத்த இந்திய டெஸ்ட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்க களத்தை பொறுத்தவரையில் இந்திய அணி வழக்கமாக தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற போது கோலி தான் (286 ரன்கள்) அதிக ரன்கள் அடித்திருந்தார். வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை. இந்த முறையும் அப்படி தான் உள்ளது. மற்றொரு புறம் தென்னாப்பிரிக்கா களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அணிக்கு வாய்ப்பு

இந்திய அணிக்கு வாய்ப்பு

ஆனால் இதில் இந்திய அணி வெற்றி பெற தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. தென்னாப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணாக இருக்கும் போதும் சொதப்பி வருகிறது. கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் தொடர்களில் 2 தோல்விகளை சந்தித்திருக்கிறது. கடந்த தொடரில் இங்கிலாந்திடம் 4 - 1 என தோற்றது. அடுத்ததாக சமீபத்தில் விளையாடிய தொடரில் இலங்கையிடம் 2 - 0 என்ற கணக்கில் தோற்றது.

4 வருட ரெக்கார்ட்

4 வருட ரெக்கார்ட்

2017ம் ஆண்டு முதல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தென்னாப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் 24 தொடர்களை விளையாடி 16ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 7 தொடர்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அதுவும் சமீபத்திய ஃபார்ம் தான் மோசமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அந்த அணியில் முக்கிய வீரர்களான குயிண்டன் டிக்காக், ஆன்ரே நார்ட்ஜே போன்றவர்கள் விலகியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

IND vs SA: Why Duanne Olivier will be Threat | OneIndia Tamil
மிரட்டும் இந்திய அணி

மிரட்டும் இந்திய அணி

மற்றொரு புறம் இந்திய அணியோ அயல்நாட்டு களங்களில் அசுர வேகத்தை காட்டி வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பெரும் அணிகளையே அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்து தொடரில் அட்டகாசமாக விளையாடியுள்ளதால் இந்தியா வெற்றி பெற தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது ரோகித் சர்மா இல்லையென்றாலும், அவரின் இடத்தை நிரப்ப திறமையான வீரர்கள் உள்ளனர்.

Story first published: Saturday, December 25, 2021, 13:33 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+