Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முடியாது தம்பி”.. கோலியின் ஈகோவை தொட்ட தென்னாப்பிரிக்க சீனியர்.. 3வது டெஸ்டில் நடக்கவுள்ள போர்!

கேப்டவுன்: இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இந்திய அணி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் தொடர் 1- 1 என சமநிலை ஆனது.

வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 11ம் தேதி கேப்டவுன் நகரத்தில் தொடங்கவுள்ளது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இதற்கான பயிற்சிகளில் தான் இரு அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதால், புதிய வரலாறு படைக்க காத்துள்ளது. விராட் கோலியும் இந்த போட்டியில் கம்பேக் கொடுக்கவுள்ளார். இதே போல சீனியர் வீரர்களான ரகானே - புஜாரா ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். இதனால் இந்தியா பெரும் பலத்துடன் உள்ளது.

கோலிக்கு எச்சரிக்கை

கோலிக்கு எச்சரிக்கை

இந்நிலையில் கேப்டன் விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் வெர்னான் பிலாண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 3வது டெஸ்டில் இரு அணிகளுக்குள்ளும் பெரிய போட்டி இருக்காது என நினைக்கிறேன். ஏனென்றால் நிச்சயம் தென்னாப்பிரிக்கா தான் வெல்ல போகிறது. 2வது டெஸ்டில் பெற்ற வெற்றியால் தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் உள்ளனர்.

பிலாண்டர் எச்சரிக்கை

பிலாண்டர் எச்சரிக்கை

போட்டி நடைபெறும் நியூலாண்ட் மைதானம், எங்களுக்கு மிகவும் பிடித்தமான, அனுபவமான மைதானம் ஆகும். இங்கு நிச்சயம் தென்னாப்பிரிக்காவின் முழு ஃபார்மை காணலாம். அவர்களின் தொடக்கம் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் 2வது டெஸ்டில் கொடுத்த கம்பேக் அற்புதமான ஒன்று. இதனால் இந்திய அணியின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். கோலி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Recommended Video

IND vs SA India தோல்விக்கு இதுவே காரணம் –KL Rahul வருத்தம் | Oneindia Tamil
விராட் கோலியின் குணம்

விராட் கோலியின் குணம்

இந்திய அணி தோற்றுவிடும் என யாரேனும் விமர்சனம் செய்வது புதிதல்ல. ஆனால் அதன் பிறகு இந்திய அணி அபார வெற்றியை பெற்றிருப்பதை பல முறை பார்த்துள்ளோம். குறிப்பாக விராட் கோலியிடம் தோற்றுவிடுவோம் என யாரேனும் கூறினால் அவரின் ஆக்ரோஷம் களத்தில் பெரும் அளவில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Saturday, January 8, 2022, 21:53 [IST]
Other articles published on Jan 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+