கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு.. தென்னாப்பிரிக்க கேப்டனை கட்டி அணைத்த கோலி.. நெகிழ்ச்சி சம்பவம்
கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவரது கடைசி இன்னிங்க்ஸ் பேட்டிங்கை இந்திய அணிக்கு எதிராக ஆடினார்.
அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது விராட் கோலி அவருக்கு தலை வணங்கி மரியாதை செய்ததோடு, அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். அதே போல, மற்ற இந்திய வீரர்களும் ஓடி வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

தென்னாப்பிரிக்க அணியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆடி வந்தார் டீன் எல்கர். முழு நேர டெஸ்ட் வீரராக மட்டுமே அவரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அமைப்பு பயன்படுத்தி வந்தது. 85 டெஸ்ட் போட்டிகளிலும், 8 ஒருநாள் போட்டிகளிலும் டீன் எல்கர் ஆடி இருக்கிறார். 85 டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆடியுள்ள அவர் 5331 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 38.35 ஆகும். 14 சதம், 23 அரைசதம் அடித்துள்ளார்.
36 வயதான டீன் எல்கர், இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். இத்தகை அடுத்து முதல் டெஸ்ட்டில் 185 ரன்கள் குவித்து தன் கடைசி டெஸ்ட் தொடரை மறக்க முடியாத ஒன்றாக மாற்றினார்.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 12 ரன்களும் மட்டுமே எடுத்தார். அவர் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த போது விராட் கோலி அவருக்கு தலை வணங்குவது போல சைகை செய்து, அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மற்ற இந்திய வீரர்களும் ஓடி வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களும், இந்தியா 153ரன்களும் எடுத்தன. முதல் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து களத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications