Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாறு படைக்குமா இந்தியா - இந்தியா Vs தென்னாப்பிரிக்கா நாளை மோதல்.. பிளேயிங் XI

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்கில் நாளை தொடங்குகிறது

Recommended Video

இதுவரை தோல்வியே பார்த்தது இல்லை.. Johannesburg-ல் வரலாறு படைக்குமா India?

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நாளைய போட்டியில் இந்தியா வென்றால் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும். இதனால் நாளைய போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராசியான மைதானம்

ராசியான மைதானம்

ஜோகனஸ்பர்கில் இந்தியா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 2 முறை வெற்றியும், 3 முறை டிராவையும் கண்டுள்ளது. இதுவரை ஜோகனஸ்பர்க்கில் இந்தியா தோல்வியை தழுவியதில்லை, கடந்த 2018ஆம் ஆண்டு கோலி தலைமையிலான அணி ஜோகனஸ்பர்கில் விளையாடிய போது 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டிங் காப்பற்றுமா?

பேட்டிங் காப்பற்றுமா?

இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு உலகத்தரத்தில் உள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடி உறுதி. ஆனால், இந்திய அணி பேட்டிங்கும் மோசமாகவே உள்ளது. கே.எல்.ராகுல், மாயங் அகர்வால் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் முதல் டெஸ்டில் சொதப்பினர்.

பேட்டிங் காப்பற்றுமா?

பேட்டிங் காப்பற்றுமா?

இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு உலகத்தரத்தில் உள்ளது. இதனால் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடி உறுதி. ஆனால், இந்திய அணி பேட்டிங்கும் மோசமாகவே உள்ளது. கே.எல்.ராகுல், மாயங் அகர்வால் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் முதல் டெஸ்டில் சொதப்பினர்.

சீனியர்கள் குழு

சீனியர்கள் குழு

இதனால் புஜாரா, விராட் கோலி,. ரஹானே, பண்ட் ஆகியோர் குறைந்தபட்சம் அரைசதம் அடித்தால் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எவ்வித அழுத்தம் இன்றி பந்துவீச முடியும். இதனால் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்

5 பந்துவீச்சாளர்கள்

5 பந்துவீச்சாளர்கள்

2வது டெஸ்ட்டில் புஜாரா, ரஹானே ஆகியோர்களில் ஒருவர் நீக்கப்பட்டு விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் என யாராவது ஒருவருக்கு வாய்ப்பு தருவது சிறப்பாக இருக்கும். அனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த டெஸ்ட் போட்டியிலும் 5 பந்துவீச்சாளர்களுடன் தான் இந்தியா களமிறங்க உள்ளது.

பிளேயிங் வெலன்

பிளேயிங் வெலன்

இந்தியா உத்தேச அணி, கே.எல்.ராகுல், மாயங் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்,

தென்னாப்பிரிக்க உத்தேச அணி, டீன் எல்கார், ஏய்டன் மார்க்ரம், பீட்டர்சன்,வென்டர் டூசன், டெம்பா பெவுமா, கையில் வெர்ரைன் ( விக்கெட் கீப்பர்), வியான் முல்டர்/ ஆலிவியர், ரபாடா,கேசவ் மகாராஜ்,லுங்கி நிகிடி, மார்கோ ஜென்சன்

Story first published: Sunday, January 2, 2022, 12:00 [IST]
Other articles published on Jan 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+