"நெட்"டில் சற்றே தடுமாறிய டோணி.. என்னாச்சு தல??
கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்குத் தயாராகி வருகிறது இந்தியா. வலைப் பயிற்சியில் முன்னாள் கேப்டன் டோணி ஈடுபட்டிருந்தபோது சில பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியதைக் காண முடிந்தது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஜம்மென்று வென்ற கையோடு அடுத்து ஒரு நாள் தொடரில் இலங்கையைச் சந்திக்கவுள்ளது இந்தியா.
மொத்தம் 5 ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி ஆகஸ்ட் 20ம் தேதி தம்புல்லாவில் நடைபெறவுள்ளது. இதற்கான வலைப் பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர்.

பிராக்டிஸில் தடுமாறிய டோணி
வலைப் பயிற்சியில் டோணியும் ஈடுபட்டார். அப்போது அவர் சில பந்துகளை சமாளிக்கத் தடுமாறியதைக் காண முடிந்தது. ஆனால் ஆரம்பத்தில்தான் தடுமாறினார். அதன் பிறகு அடித்து ஆடினார்.

இந்திய - இலங்கை பந்து வீச்சாளர்கள்
டோணிக்கு சில இந்திய வேகப் பந்து வீச்சாளர்களும், சில லோக்கல் இலங்கை பந்து வீச்சாளர்களும் பந்து வீசினர். தொடக்க தடுமாற்றத்திற்குப் பின்னர் நார்மல் நிலைக்குத் திரும்பினார் டோணி.

நல்ல பார்ம்
டோணி நல்ல பார்மில் இருப்பதை இந்த பிராக்டிஸ் காட்டியதாக இந்திய அணி நிர்வாகமும் திருப்தி தெரிவித்துள்ளது. சில அருமையான ஷாட்டுகளையும் கூட டோணி அடித்தார்.

அசத்துவாரா.. ரசிகர்கள் வெயிட்டிங்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தியதைப் போல, ஒரு நாள் தொடரில் டோணி அசத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரும் காத்திருப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications