Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL முதல் டெஸ்ட் பிளேயிங் 11-இல் ரிஸ்க் எடுத்த இந்திய அணி.. 6வது பவுலர் யாருமே இல்லை!

காலே: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலே சர்வதேச மைதானத்தில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக காட்சியளிப்பதால் பெரிய ஸ்கோரை எட்டுவதே இலக்கு என அவர் தெரிவித்தார்.

காலே மைதானத்தின் தன்மையை உணர்ந்து, இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற பந்துவீச்சு கலவையுடன் களம் கண்டுள்ளது. ஆறாவது பந்துவீச்சாளர் மற்றும் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இல்லாதது சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

India vs Sri Lanka 1st Test Toss and Playing XI India playing with three spinners and two pacers

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் முன்னணி ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க, கேப்டன் சுப்மன் கில், தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் நடுவரிசையில் ஆட உள்ளனர். சர்பராஸ் கானுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

மறுபுறம், தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணியில் 25 வயதான ஆஃப் ஸ்பின்னர் கேஷரா நுவந்தா சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில், ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கை அணி 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 ஆல்-ரவுண்டர்களுடன் விளையாடுகிறது.

காலே நகரில் வெப்பமான சூழல் நிலவினாலும், இடையே லேசான சாரல் மழை குறுக்கிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை குறிவைத்து களமிறங்கியுள்ள இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆட உள்ளது.

காதலிக்கு மெசேஜ்.. தமிழக வீரருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. டிஎன்பிஎல் தொடரில் அதிரடி

காதலிக்கு மெசேஜ்.. தமிழக வீரருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.. டிஎன்பிஎல் தொடரில் அதிரடி

இந்திய அணி பிளேயிங் 11:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சுப்மன் கில் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா

இலங்கை அணி பிளேயிங் 11:

லகிரு உதாரா, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கேஷரா நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, லகிரு குமாரா மற்றும் அசிதா பெர்னாண்டோ.

இலங்கையிடம் இந்தியா தோற்றால்.. கம்பீருக்கு ஏற்படப்போகும் சிக்கல்.. பதவி இருக்கும் ஆனால்..!

Also Read

இலங்கையிடம் இந்தியா தோற்றால்.. கம்பீருக்கு ஏற்படப்போகும் சிக்கல்.. பதவி இருக்கும் ஆனால்..!
Story first published: Saturday, August 15, 2026, 9:48 [IST]
Other articles published on Aug 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+