Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: என்னது மழை பெய்யுமா? இலங்கைத் தொடரில் ஆரம்பமே சிக்கல் - வானிலை மைய ரிப்போர்ட்

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டிக்கான வானிலை மைய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

ஒருவழியாக இந்தியா - இலங்கை தொடர் நாளை (ஜுலை.18) தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இரு அணிகளும் தயாராக உள்ளன.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 'ஏ' அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ப்ரேமதசா ஸ்டேடியம்

ப்ரேமதசா ஸ்டேடியம்

இந்தியா - இலங்கை தொடர், ஜூலை 13ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுலை 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறுகிறது.

கோச் டிராவிட்

கோச் டிராவிட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஓவர்கள்

மிடில் ஓவர்கள்

பொதுவாக, கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், ஆட்டத்தின் பிற்பகுதியில் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சில முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இருப்பினும், பேட்டிங் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கடினமாகிவிடும் என தெரிகிறது.

Recommended Video

IND Vs SL 1st ODI | SRILANKA won Toss, Ishan Kishan Birthday Debut
வெப்பநிலை

வெப்பநிலை

கொழும்பில் உள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் மழை பெய்ய 20 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதே நேரத்தில் 77 சதவீத ஈரப்பதம் இருக்கும். மறுபுறம், காற்றின் வேகம் மணிக்கு 24 கி.மீ. என்று தெரிகிறது.

Story first published: Saturday, July 17, 2021, 18:06 [IST]
Other articles published on Jul 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+