Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL 2nd ODI: மழை வந்து இலங்கையை காப்பாற்றுமா? மாலையில் காத்திருக்கும் வானிலை "சஸ்பென்ஸ்"

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இன்றைய 2வது ஒருநாள் போட்டியில், மழை பெய்ய எந்தளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜுலை.20) கொழும்புவில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஜெயித்திருக்கும் நிலையில், இன்று 2வது போட்டி நடைபெறுகிறது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை, வெறும் 36.4வது ஓவரிலேயே அடித்து, இலங்கை பவுலர்களை டாமினேட் செய்து வெற்றிப் பெற்றது இந்திய அணி. கிட்டத்தட்ட ஒரு டி20 போட்டியைப் போல ஆடியது இந்தியா. இலங்கை பவுலர்களால் இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்திய ஸ்பின்னர்கள் முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அளவுக்கு இலங்கை ஸ்பின்னர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

பவுலர்கள் கவனம்

பவுலர்கள் கவனம்

இன்னும் சொல்லப்போனால், இஷான் கிஷன் இலங்கை ஸ்பின்னர்களை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் விளாசினார். டிராவிட் பயிற்சியின் கீழ், இந்திய இளம் வீரர்களின் டாமினேஷன் "வாவ்" என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஷிகர் தவானின் கேப்டன்சியும் டீசண்ட்டாக உள்ளது. ஒரேயொரு நெகட்டிவ் விஷயம் என்னவெனில், இந்திய ஃபேஸர்கள் கடைசி சில ஓவர்களில் ரன்களை வாரி வழியங்கியது தான். இலங்கை அணி கடைசி 5 ஓவர்களில் 50க்கும் மேல் ரன்களை குவித்தது. இந்த இடத்தில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ் குமார், தீபக் சாஹர் கவனமுடன் இருக்க வேண்டும்.

அறிக்கை சொல்வதென்ன?

அறிக்கை சொல்வதென்ன?

சரி.. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம். Accuweather தகவலின் படி, இன்று நாள் முழுவதும் பரவலாக வெயில் இருக்கும் என்று தெரிகிறது. எனினும் மாலை நேரத்தில் மேகமூட்டங்கள் திரள வாய்ப்பிருக்கிறதாம். அதேசமயம், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று கூறப்பட்டுள்ளது (முதல் மேட்சுல மழை பெய்யும்-னு சொன்னாங்க.. பெய்யல)

Recommended Video

IND VS SL கடைசிநேரத்தில் Srilanka Team அதிரடி Comeback | Oneindia Tamil
இவ்வளவு வெற்றியா

இவ்வளவு வெற்றியா

ஸோ, வானிலை நிலவரத்தை பார்க்கும் பொழுது, போட்டி நிச்சயம் முழுமையாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இன்று இந்திய அணி வெல்லும் பட்சத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்று கைப்பற்றிவிடும். ஒருவேளை வெற்றிப் பெற்றால், அது இலங்கைக்கு எதிரான 93-வது ஒருநாள் போட்டி வெற்றியாக அமையும். உலகின் வேறு எந்த அணியும், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 20, 2021, 16:59 [IST]
Other articles published on Jul 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+