Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இலங்கை 2வது டெஸ்ட் போட்டி முழுசா நடப்பதே சந்தேகம்.. வெளியான முக்கிய தகவல்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தொடங்க உள்ளது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியைப் போலவே, இந்த இரண்டாவது போட்டியிலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை எச்சரித்துள்ளது.

முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமானால் இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமாகும். ஆனால், கொழும்பில் ஐந்து நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

India vs Sri Lanka 2nd Test Colombo Weather Forecast Heavy Rain can spoil the match

அக்யூவெதர் அறிக்கையின்படி, இந்தப் போட்டியின் ஐந்து நாட்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. முதல் நாளில் மழை பெய்ய 64 சதவீத வாய்ப்புள்ளது. குறிப்பாக காலை மற்றும் மதிய வேளையில் மழை அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் 96 சதவீதமும், மூன்றாவது நாளில் 91 சதவீதமும் பலத்த மழை பெய்யக்கூடும். நான்காவது நாளிலும் மழையின் குறுக்கீடு ஆட்டத்தை பாதிக்கக்கூடும் நிலையில், ஐந்தாவது நாளிலும் 91 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் போட்டி முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, ஆட்டம் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது.

முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், கே.எல்.ராகுல் 82 ரன்களும் குவித்திருந்தனர். விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரும் அரைசதங்கள் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் இந்திய ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக மானவ் சுதர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் 372 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி இந்திய ஸ்பின்னர்களைச் சமாளிக்க முடியாமல் 202 ரன்களுக்குச் சுருண்டது.

சச்சின் பெருசா.. கோலி பெருசா? SENA ஆதாரத்துடன் உண்மையை உடைத்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

சச்சின் பெருசா.. கோலி பெருசா? SENA ஆதாரத்துடன் உண்மையை உடைத்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் ஆட்டங்களை பொறுத்தவரை, இதுவரை விளையாடியுள்ள 47 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 23 போட்டிகளிலும், இலங்கை 7 போட்டிகளிலும் வென்றுள்ளன. 17 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்தியா விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 22, 2026, 20:25 [IST]
Other articles published on Aug 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+