Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பீஸ்ட்" மோடில் கோச் டிராவிட்.. இன்றே கப் அடிக்க உறுதி - வீரர்களிடம் உச்சரித்த "அந்த" ஒரு வார்த்தை

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், மூன்றாவது போட்டி வரை எல்லாம் எதிர்பார்ப்புகளை கடத்திச் செல்ல கோச் ராகுல் டிராவிட் விரும்பவில்லையாம்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜுலை.20) கொழும்புவில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதைமுன்னிட்டு, வீரர்கள் அனைவரிடமும் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்திருக்கிறராம் டிராவிட்.

 அசுரத்தனமாக ஜெயிக்க

அசுரத்தனமாக ஜெயிக்க

யெஸ்! ராகுல் டிராவிட் நம்மை பொறுத்தவரை, ஒரு பிளேயராக சாஃப்ட்டான வீரராக தான் பார்த்திருக்கிறோம். இப்போதும் அவர் அப்படித்தான். எப்போதும் அவர் அப்படித்தான். ஆனால், ஒரு பயிற்சியாளராக அவரது அணுகுமுறை மிக மிக அக்ரெஸ்ஸிவ் என்கின்றனர். இந்திய 'ஏ' அணிக்கு கோச்சாக நியமிக்கப்பட்டதை தனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அக்னீப்பரீட்சையாக டிராவிட் கருதுகிறாராம். இதனால், இத்தொடரை சாதாரணமாக ஜெயிக்காமல், அசுரத்தனமாக ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

 பிளேயர் vs கோச்

பிளேயர் vs கோச்

அதன் வெளிப்பாடே, முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை, வெறும் 36.4வது ஓவரிலேயே அடித்து, இலங்கை பவுலர்களை நொறுக்கி வென்றிருக்கிறது இந்திய அணி. அது ஒருநாள் போட்டி என்றால் அந்த கிரிக்கெட்டுக்கே கோபம் வந்துவிடும். ஒரு பக்கா 50 ஓவர் டி20 கிரிக்கெட்டை ஆடியது இந்திய அணி. டிராவிட் ஆட்ட பாணிக்கும், அவரது கோச் பாணிக்கும் எத்தனை வேறுபாடுகள் இருக்கிறது என்று இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

 டிராவிட் அணுகுமுறை

டிராவிட் அணுகுமுறை

அவர் நினைத்திருந்தால், "இந்த போட்டியில் நாம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். ஆகையால், விக்கெட் விழாமல் மிக பொறுமையாக விளையாட வேண்டும். எச்சரிக்கையுடன் ஆடுங்க" என்று எச்சரித்திருந்தால், இந்திய அணியின் பிளேயிங் முறையே மாறியிருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ப்ரித்வி ஷாவை அவரது இயற்கையான ஆட்டத்தை விளையாட வைத்தார். இஷான் கிஷன் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். இத்தனைக்கு அந்த போட்டி அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

Recommended Video

IND vs SL 2nd ODI Predicted playing 11 | OneIndia Tamil
 அனைவருக்கும் வாய்ப்பு

அனைவருக்கும் வாய்ப்பு

இந்த நிலையில் தான் இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. இது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பதால், இப்போட்டியில் வென்றால், தொடர் இந்தியா வசமாகிவிடும். ஒருவேளை தோற்றால், 3வது போட்டி இறுதிப் போட்டியாக அமைந்துவிடும். ஆனால், ராகுல் டிராவிட் 3வது மேட்ச் என்ற பேச்சுக்கே செல்லவில்லையாம். இதுகுறித்து அவர் வீரர்களிடம், இறுதிப் போட்டி என்ற கான்செப்ட்டே இங்கு இருக்கக் கூடாது. இன்றைய மேட்சும் நம் கையில் தான் இருக்க வேண்டும். இன்றே நீங்கள் தொடரை வென்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. இதில், இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், தொடரை இன்றே வென்றுவிடும் பட்சத்தில், வெளியே பென்ச்சில் உட்கார்த்திருக்கும் மற்ற வீரர்களை கடைசி ஒருநாள் போட்டியில் களமிறக்கி அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே டிராவிட்டின் விருப்பம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Tuesday, July 20, 2021, 13:17 [IST]
Other articles published on Jul 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+