இந்தியாவின் ப்ளேயிங் 11.. கொழும்புவில் இருந்து பறந்த தகவல்.. ஓப்பனிங் ஜோடிக்கான போட்டிக்கு தீர்வு!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இந்தியாவின் ப்ளேயிங் 11 குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
Recommended Video
இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதுகிறது.
இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் ஒருநாள் ஆட்டம்
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் தொடர் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பயிற்சிகளுக்கு கூடுதல் அவகாசம் பெற்றுள்ள இந்திய அணியில் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

ஓப்பனிங் யார்?
இந்நிலையில் கேப்டன் ஷிகர் தவானுடன் ஓப்பனிங் களமிறங்க போவது யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில்,ஷிகர் தவான் தவிர்த்து தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், ப்ரித்வி ஷா ஆகிய 3 வீரர்கள் ஓப்பனிங்கிற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் நிதிஷ் ராணாவும் ஓப்பனிங்கில் களமிறங்கக்கூடியவர். இப்படி ஓப்பனிங் இடத்திற்கு நிலவும் கடும் போட்டியில் பிரித்வி ஷா வெற்றி பெற்றுள்ளார்.

காரணம் என்ன?
இதுகுறித்து அணி நிர்வாகத்தில் இருந்து வெளியான தகவலில், பிரித்வி ஷா உள்நாட்டு தொடர்களில் மிகச்சிறப்பாக ரன்குவித்தார். தவான் & பிரித்வி ஆகியோர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஓப்பனிங்கில் ஏற்கனவே பலப்போட்டிகளில் விளையாடியவர்கள். இதுமட்டுமல்லாமல கடந்த விஜய் ஹசாரே தொடர், ஐபிஎல் போட்டிகள் என மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனவே அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. தேவ்தத் பட்டிக்கல் மற்றும் ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

டி20 உலகக்கோப்பை
பிரித்வி ஷாவை இந்தியாவின் மெயின் அணிக்கு மீண்டும் அழைக்க கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆர்வமாக உள்ளனர். அவரின் ஆட்டத்தை உற்றுநோக்கி, டி20 உலகக்கோப்பையில் பிரித்வி ஷாவையும் ஒரு ஓப்பனிங் வீரராக எடுத்துக்கொள்ள திட்டம் போட்டு வருகின்றனர். அதற்கான முயற்சியாக தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா பங்கேற்க வேண்டும் என கோலி மற்றும் சாஸ்திரி அழைப்புவிடுத்திருந்தனர். எனினும் அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications