Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3-வது ஒருநாள் கிரிக்கெட்: ஒரு விக்கெட் இழப்புக்கு இலங்கை 18 ரன்களுடன் திணறல்!

பல்லேகலே: பல்லேகலேயில் நடந்துவரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி , ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்து தடுமாறிவருகிறது. இலங்கையின் டிக் வெல்லாவை வீழ்த்தி முதல் விக்கெட்டை எடுத்தார் பும்ரா.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

 India vs Sri Lanka ODI :Bumrah gets Dickwella early, Srilanka 18/1

இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் தொடங்கியது. அதில், மெதுவாக பந்து வீசியதன் காரணமாக இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் தரங்காவிற்குப் பதிலாக கபுகேதரா இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பின்னர் களம் இறங்கிய வீரர்கள், ரன்கள் எடுக்க திணறினர். இலங்கையின் டிக் வெல்லாவை வீழ்த்தி முதல் விக்கெட்டை எடுத்தார் பும்ரா.

இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் தரங்காவிற்குப் பதிலாக திரிமன்னே சேர்க்கப்பட்டுள்ளார். குணதிலகாவிற்குப் பதிலாக சண்டிமல் அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 27, 2017, 18:09 [IST]
Other articles published on Aug 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+