For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தவான் அதிரடி சதம்... 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா!

தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது இந்திய அணி.

By Devarajan

தம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

 டிக்வெல்லா 64 ரன்கள்

டிக்வெல்லா 64 ரன்கள்

2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

 150/3 விக்கெட்டுகள்

150/3 விக்கெட்டுகள்

டிக்வெல்லா அவுட்டான சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார். இலங்கை அணி 27.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

 216-ல் சுருண்டது

216-ல் சுருண்டது

அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அந்த அணி 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ரன்னில் சுருண்டது. கடைசி 66 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது இலங்கை. இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 அக்சார் படேல்

அக்சார் படேல்

இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பும்ப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 217 என்ற எளிதான இலக்கோடு இந்தியா களம் இறங்கி உள்ளது.

டிக்வெல்லா 64 ரன்கள்

டிக்வெல்லா 64 ரன்கள்

2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

150/3 விக்கெட்டுகள்

150/3 விக்கெட்டுகள்

டிக்வெல்லா அவுட்டான சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார். இலங்கை அணி 27.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

216 ரன்கள்

216 ரன்கள்

இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அந்த அணி 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ரன்னில் சுருண்டது. கடைசி 66 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது இலங்கை. இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அக்சார் பட்டேல்

அக்சார் பட்டேல்

இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பும்ப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 217 என்ற எளிதான இலக்கோடு இந்தியா களம் இறங்கியது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

ஷிகார் தவான் அதிரடியாக விளையாடினார். ரோகித் சர்மா 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 2வது விக்கெட்டுக்கு கோஹ்லி ஜோடி சேர்ந்தார். தவான்-கோஹ்லி ஜோடி அசத்தலாக விளையாடியது. 28.5-வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி.

Story first published: Sunday, August 20, 2017, 22:20 [IST]
Other articles published on Aug 20, 2017
English summary
Toss won by India, Virat decided to bowl in First day ODI series against Srilanka.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+