For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

24 ஆண்டுகால சாதனைக்கு சிக்கல்.. இலங்கை தொடரில் சுவாரஸ்யம்.. இந்திய வீரர்கள் படைக்கப்போகும் சாதனை!

கொழும்பு: இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இந்தியாவின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இளம் படையை கொண்ட இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் கடந்த 13ம் தேதியன்றே நடைபெறவிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஜூலை 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் படைக்கப்போகும் சாதனை குறித்து பார்க்கலாம்.

தவானின் சாதனை

தவானின் சாதனை

இந்திய அணியின் கேப்டனாக செயல்படபோகும் அனுபவ வீரர் ஷிகர் தவான், இன்னும் 23 ரன்களை அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 ரன்களை கடப்பார். இந்த மைல்கல்லை எட்டும் 5வது இந்திய ஓப்பனிங் வீரர் ஆவார். இதே போல 35 வயதில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஷிகர் தவான் தான் மிக அதிக வயதில் இந்திய அணியின் கேப்டன் ஆவார்.

நீண்ட வருட காத்திருப்பு

நீண்ட வருட காத்திருப்பு

ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக திகழும் சஞ்சு சாம்சன் 5 ஆண்டுகள் மற்றும் 364 நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார். இதுதான் ஒரு இந்திய வீரரின் மிக நீண்ட காத்திருப்பு ஆகும். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியில் கடந்த சில தொடர்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் இன்னும் 8 விக்கெட்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டுவார். அதே போல வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்னும் 12 விக்கெட்களை எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்களை எடுத்த வீரர் ஆவார்.

Recommended Video

Sri Lanka கடைசியா Indiaவை எப்போ Win பண்ணினாங்க? Dhoni, Rajini, Stalin எல்லாமே மாறிட்டாங்க
இந்திய அணியின் சாதனை

இந்திய அணியின் சாதனை

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மிகவும் பலமான ஒன்றாக தான் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணம், சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியை கடைசியாக 1997ம் ஆண்டில் தான் இலங்கை அணி வீழ்த்தியது. தற்போது நடைபெறும் தொடரில் இலங்கை வெற்றி பெற்றால், 24 ஆண்டு கால இந்திய அணியின் சாதனை தகறும்.

Story first published: Saturday, July 17, 2021, 19:09 [IST]
Other articles published on Jul 17, 2021
English summary
India vs Sri Lanka ODI Stats and Records Preview, Here are the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+