For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலிக்கே சவால் விடும் தவான்.. முதல் ஒருநாள் போட்டியில் மிகப்பெரும் மைல்கல்.. ஆசை நிறைவேறுமா?

கொழும்பு: இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் வரலாற்று சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

இளம் படையை கொண்ட இந்திய அணி, தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டித்தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் கடந்த 13ம் தேதியே தொடங்கவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றுவிட்டதால், இலங்கை தொடரில் பங்கேற்றிருக்கும் இளம் படையை கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் அனுபவம் மற்றும் ஐபிஎல் இருந்த ஃபார்ம் ஆகியவற்றை மனதில் வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவதற்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

புது மைல்கல்

புது மைல்கல்

இந்நிலையில் கேப்டன் ஷிகர் தவான், இலங்கை தொடரில் பல்வேறு புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் தற்போது வரை அவர் 5,9977 ரன்களை அடித்துள்ளார். இன்னும் 27 ரன்களை அடித்தால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய 10வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெறுவார். அதுமட்டுமல்லாமல் 5வது இந்திய ஓப்பனிங் வீரர் ஆவார்.

2வது இடம்

2வது இடம்

அதிவேகமாக 6000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவானை சேரவுள்ளது. அவர் 140 இன்னிங்ஸ்களில் இதனை செய்யவுள்ளார். விராட் கோலி 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி 147 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி தற்போது 2வது இடத்தில் உள்ளார். ஒருவேளை ஷிகர் தவான் நாளை நடைபெறும் போட்டியில் 6000 ரன்களை கடந்துவிட்டால், சவுரவ் கங்குலியை முந்துவார்.

Recommended Video

எல்லா நேரமும் மாஸ்க் போட்டுட்டே இருப்பது சாத்தியமில்லை.. Rishabh Pant விவகாரத்தில் Ganguly கருத்து
பிற சாதனைகள்

பிற சாதனைகள்

35 வயது, 255 நாட்கள் ஆகும் ஷிகர் தவான் தான், மிகவும் அதிக வயதில் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் வீரர் ஆகும். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை தலைமை தாங்கும் 25வது கேப்டன் ஷிகர் தவான் ஆகும். நாளைய போட்டியில் தவான் இன்னும் 17 ரன்களை அடித்தால், இலங்கை எதிராக மிக வேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

Story first published: Saturday, July 17, 2021, 18:50 [IST]
Other articles published on Jul 17, 2021
English summary
Shikhar Dhawan have a chance to surpass Sourav Ganguly to achieve huge milestone in 1st ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+