தமிழக வீரருக்கு வாய்ப்பு.. ட்ராவிட் போட்ட சூப்பர் ப்ளேன்.. முதல் டி20 போட்டிக்கு சூப்பர் ப்ளேயிங் 11
கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11ல் சர்ஃப்ரைஸ் கொடுத்துள்ளது இந்திய அணி.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்த போட்டிகாக பக்கா ப்ளேயிங் 11 உடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

ஓப்பனிங் ஜோடி
கேப்டன் ஷிகர் தவானுடன் ஒருநாள் போட்டி தொடர் முழுவதுமே பிரித்வி ஷாவுக்கு மட்டுமே ஓப்பனிங் களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஐபிஎல் தொடரிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய அனுபவம் உள்ளதால் இந்த போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கே ஓப்பனிங் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகிய இருவருமே மீண்டும் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

மிடில் ஆர்டரில் யார்
ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து அசத்திய இஷான் கிஷான் டி20 போட்டியிலும் முதல் விக்கெட்டிற்கு களமிறங்குகிறார். சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா களமிறங்கியுள்ளனர். ஹர்திக் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி வருவதால் டி20 தொடரில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங் படை
பந்துவீச்சை பொறுத்தவரை துணை கேப்டன் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் ஆகியோர் எதிர்பார்த்தபடி களமிறங்கியுள்ளனர். ஸ்பின்னிங்க் படையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இன்று தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்குகிறார். இவருக்கு பக்க பலமாய் யுவேந்திர சாஹல் களமிறக்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11 கணிப்பு
ஷிகர் தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி,


Click it and Unblock the Notifications