இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்.. 3 இடத்திற்கு கடும் போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்
கவுகாத்தி : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 10ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் திரும்பி உள்ளனர்.
காயத்திலிருந்து குணமடைந்துள்ள பும்ரா ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழு பலத்துடன் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. ஜடேஜா மட்டும் தான் இல்லை.
ஆனால் அந்த குறையை அக்சர் பட்டேல் தீர்த்துவிடுவார். இந்திய அணி 50 ஓவர் உலககோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான தயாரிப்பு பணிகளை தற்போதிலிருந்தே தொடங்கி உள்ளது.

தொடக்க வீரர் யார்?
கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளதால், அவருக்கு ஜோடி யார் என்பது தான் தற்போது கேள்விக்குறியே. கடைசியாக இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனை சேர்ப்பதா, இல்லை கடந்த ஆண்ட தொடக்க வீரராக அதிக ரன்களை சேர்த்த சுப்மான் கில்லை சேர்ப்பதா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் வரும்.

ஸ்ரேயாஸ் Vs ராகுல்
இதே போன்று பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் விராட் கோலியும், டி20 கிரிக்கெட்டில் இலங்கை பந்துவீச்சை அடித்து துவைத்த சூர்யகுமார் யாதவ் 4வது வரிசையில் இருப்பார். தற்போது பேட்டிங் வரிசையில் 5வது இடத்திலும் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்ட இந்தியாவுக்காக அதிக ரன்களை சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவாரா இல்லை அண்மை காலமாக சொதப்பி வரும் கேஎல் ராகுல் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆர்ஸ்தீப் vs உம்ரான்
துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 6வது இடத்திலும், அக்சர் பட்டேல் 7வது இடத்திலும் விளையாடுவார்கள். மூன்று வேகப்பந்துவீச்சாளராக பும்ரா, முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் உம்ரான் மாலிக் பதில் ஆர்ஸ்தீப் சிங் தேர்வு செய்யப்படலாம். ஆனால் அது தவறான முடிவாக இருக்கும். ஒரு முனை பும்ரா, மறு முனை உமரான் என்று கற்பனை செய்து பாருங்கள் முடிவை நீங்கள எடுங்கள்.

இந்திய பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, சுப்மான் கில் / இஷான் கிஷன், 3, விராட் கோலி, 4 , சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல் / ஸ்ரேயாஸ் ஐயர், 6,ஹர்திக் பாண்டியா, 7, அக்சர் பட்டேல், 8, முகமது சிராஜ், 9, உம்ரான் மாலிக் / ஆர்ஸ்தீப் சிங் 10, பும்ரா, 11, சாஹல் / குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications