For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ.. யாருக்கு வாய்ப்பு

மும்பை : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இந்த டி20 அணியில் இடம்பெறவில்லை. இதே போன்று கேஎல் ராகுல் துணை கேப்டனாக நீக்கப்பட்டு, டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை

கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலைமையில் இந்திய டி20 அணி புதிய தொடக்கத்தில் அடியேடுத்து வைக்கிறது.

தொடக்க ஜோடி

தொடக்க ஜோடி

டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தொடக்க ஜோடி தான். இதனால், இந்திய அணி, இந்த தொடரில் புதிய ஜோடியை களமிறக்குகிறது. இஷான் கிஷன், சுப்மான் கில் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. கூடுதல் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

நடுவரிசை

நடுவரிசை

இதே போன்று நடுவரிசையிலும் முற்றிலும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பர் 3வது வீரராக களமிறங்குகிறார். இதே போன்று நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஆல் ரவுண்டர் தீபக் ஹுடா 5வது இடத்திலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 6வது இடத்திலும் விளையாடுவார்கள்.

 பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

ஜடேஜா இடத்தில் அக்சர் பட்டேல் விளையாடுவார். 8வது இடத்தில் வாசிங்டன் சுந்தர் விளையாட உள்ளார். இதே போன்று 3 வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று சிவம் மவி, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் உள்ளனர்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, சுப்மான் கில், 2, இஷான் கிஷன், 3, சூர்யகுமார் யாதவ், 4, சஞ்சு சாம்சன், 5, தீபக் ஹூடா, 6, ஹர்திக் பாண்டியா, 7, வாசிங்டன் சுந்தர், 8, அக்சர் பட்டேல், 9, ஹர்சல் பட்டேல், 10, ஆர்ஸ்தீப் சிங், 11, உம்ரான் மாலிக்

Story first published: Sunday, January 1, 2023, 21:51 [IST]
Other articles published on Jan 1, 2023
English summary
India vs srilanka 1st t20i - playing xi preview and prediction இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ.. யாருக்கு வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+