Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. பிளேயிங் லெவனில் மாற்றம்? தவறை திருத்தி கொள்வாரா ரோகித்

கொல்கத்தா : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நாளைய போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றிவிடும் என்பதால், இலங்கை அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

கொல்கத்தா ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் நிலையில், பனிப்பொழிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது.

4 வேகப்பந்துவீச்சாளர் தேவையா?

4 வேகப்பந்துவீச்சாளர் தேவையா?

இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனில் பெரிய தவறு ஒன்றை செய்கிறது. இந்தியா போன்ற ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால 3 சுழற்பந்து வீச தெரிந்த வீரர்கள் அணிக்கு தேவை. ஆனால், ரோகித் சர்மா ஏதோ வெளிநாட்டில் விளையாடுவது போல் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து 4 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறார்.

வாசிங்டன் சுந்தருக்கு இடம்?

வாசிங்டன் சுந்தருக்கு இடம்?

இதனால் இந்திய அணி பேட்டிங் வரிசையில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரை சேர்த்து கொள்வது அவசியம். வாசிங்டன் சுந்தர் வர வேண்டும் என்றால், கேஎல் ராகுலை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் வாசிங்டன் சுந்தரை பயன்படுத்தலாம். இதனால் சுப்மான் கில்லுக்கு பதில் இஷான் கிஷனை அணிக்குள் சேர்த்து, அவரை விக்கெட் கீப்பராக மாற்றலாம்.

குல்தீப் யாதவ்க்கு இடம்

குல்தீப் யாதவ்க்கு இடம்

ஆனால் இது பகல் கனவு. கேஎல் ராகுலை அணியை விட்டு நீக்குவது அவ்வளவு எளிதல்ல. இதனால் வேகப்பந்துவிச்சாளர் ஒருவரை நீக்கிவிட்டு, வாசிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். இதே போன்று அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவை அணிக்குள் கொண்டு வர ரோகித் சர்மா நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இப்படி எல்லாம் நமது அணி நிர்வாகம் யோசிக்காது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மான் கில், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, அக்சர் பட்டேல், 8, முகமது ஷமி, 9, முகமது சிராஜ், 10, உம்ரான் மாலிக், 11, சாஹல்

Story first published: Wednesday, January 11, 2023, 18:30 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+