
சொதப்பல் தொடக்கம்
தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 33 ரன்களுக்கும், கேப்டன் ரோகித் சர்மா 29 ரன்களுக்கும் அவுட்டானதால் 80 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்களை இழந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு தான் உண்மையான ஆட்டமே தொடங்கியது. விராட் கோலி ( 45) - ஹனுமா விஹாரி (58 ) ஜோடி சேர்ந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வேகமாக உயர்ந்த ஸ்கோர்
இதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட், டி20 கிரிக்கெட் விளையாடுவதை போன்று சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழைகளை பொழிந்தார். 97 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸருடன் 96 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் எடுத்தார். இந்த கட்டத்தில் ஆவது இலங்கை அணிக்கு நம்பிக்கை கிடைக்கும் என்று பார்த்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பங்கிற்கு 61 ரன்களை குவித்துவிட்டு சென்றார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்தது.

பேட்டை சுழற்றிய ஜடேஜா
மீதமுள்ள 4 விக்கெட்களுக்குள் ஒரு 400+ரன்கள் வரை சேர்க்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்போதுதான் தனது கியரை மாற்றினார் ஜடேஜா. காயத்தில் மீண்டு வந்த அவர், சதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி 175 ரன்களை குவித்தார். அவருடன் உறுதுணையாக நின்ற முகமது ஷமி 9வது விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

டிக்ளர்
இதற்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா என்ற சூழல் இருந்த போது தான் இந்திய அணி 574 / 8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இந்த களத்தில் இப்படிபட்ட ஸ்கோரை சமன் செய்வது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளதால் இலங்கை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











