Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார்ரா இந்த சூப்பர் மேன்.. வாயைப்பிளந்த சஞ்சு சாம்சன்.. தீயாய் பரவும் பினுரா ஃபெர்னாண்டோவின் கேட்ச்!

தர்மசாலா: சிக்ஸர் மழை பொழிந்து வந்த சஞ்சு சாம்சன், திடீரென இலங்கை வீரர் பினுரா ஃபெர்னாண்டோ சூப்பர் மேன் கேட்ச் பிடித்து வெளியேற்றிய வீடியோ வாயை பிளக்கவைத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தர்மசாலாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் தொடரையும் 2 - 0 எனக்கைப்பற்றியது.

ரன் விவரம்

ரன் விவரம்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 183/5 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர்களிலேயே 186 /3 ரன்களை குவித்தது. இதில் அதிக கவனம் பெற்றது சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் தான். இந்திய அணியில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் இன்று அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார்.

சஞ்சு சாம்சன் அதிரடி

சஞ்சு சாம்சன் அதிரடி

2வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அவர் 25 பந்துகளில் 39 ரன்களை விளாசித்தள்ளினார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் ஆகும். குறிப்பாக லஹிரு குமாரா வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரில் 4, 6, வைட், 6, 6 என தொடர்ச்சியாக ரன் மழைப்பொழிந்தார். அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாதா என்பது போல ருத்ர தாண்டவம் ஆடினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்திலேயே விதி அவருக்கு எதிராக அமைந்தது.

கடைசி பந்து ட்விஸ்ட்

கடைசி பந்து ட்விஸ்ட்

பவுண்டரிகள் அதிகம் சென்றதால் வைட் திசையில் பந்தை வீசினார் லஹிரு குமாரா. அதையும் சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்ட நினைக்க, பேட்டில் எட்ஜானது. ஆனால் பந்தின் வேகம் அதிகம் இருந்ததால் ஃபீல்டர்களின் தலைக்கு மேல் சென்றது. எனவே பவுண்டரிக்கு சென்றுவிடும் என்று இலங்கை வீரர்கள் சோகத்தில் இருந்தனர்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

திடீரென ஒரு கை மட்டும் மேலே காற்றில் இருந்தது. ஸ்லிப் திசையில் நின்றிருந்த பினுரா ஃபெர்னாண்டோ, அதிகவேகமாக உயரத்தில் சென்ற பந்தை சூப்பர் மேனை போன்று பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனை மைதானத்தில் இருந்த யாராலுமே நம்ப முடியவில்லை. ரசிகர்களும் இந்தாண்டின் சிறந்த கேட்ச் இதுவென இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, April 6, 2022, 12:05 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+