அடேங்கப்பா.. இதை நோட் பண்ணலையே.. முதல் டெஸ்டில் முற்றிலும் மாறுபட்ட ஃபார்முலா.. ரோகித் தவறு செய்தாரா
மொஹாலி: இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் முற்றிலும் வித்தியாசமான பவுலிங் ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டி இன்று காலை மொஹாலியில் தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் ப்ளேயிங் 11ல் ட்விஸ்ட் கொடுத்தார்.

இந்திய அணி ட்விஸ்ட்
இந்திய அணியின் வழக்கமான பவுலிங் ஃபார்முலா என்பது 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது தான். இல்லையென்றால் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 1 ஸ்பின்னர் என களமிறங்கும். ஆனால் இன்றைய போட்டியில் திடீரென 3 ஸ்பின்னர்களை நம்பி களமிறங்கியுள்ளது. இரண்டே இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் தான் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் களமிறங்குகின்றனர். வேகப்பந்துவிச்சில் பும்ரா, முகமது ஷமி களமிறங்குகின்றனர்.

இலங்கை அணி தேர்வு
ஆனால் இலங்கை அணியோ இதற்கு நேர் மாறாக 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. லசித் எம்புள்டேனியா என்ற ஒரே ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்கியுள்ளது. அணியில் பார்ட் டைம் ஸ்பின்னர்களாக கூட பெரியளவில் வீரர்கள் இல்லை. இரு அணிகளும் இப்படி இரண்டு விதமாக ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்திருப்பதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

எது சிறந்த தேர்வு
இந்நிலையில் இதில் எது சிறந்த ஒன்று என்பதை பிட்ச்-ன் நிலைமை வைத்து தான் தீர்மானிக்க வேண்டும். மொஹாலி பிட்ச்-ல் இன்று நன்கு வெயில் அடித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பிட்ச்-ம் நன்கு வரண்டு காணப்படுகிறது. இப்படி இருந்தால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் பந்து நன்கு டேர்னாகும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் இருக்காது. பிட்ச்-ல் ஈரத்தன்மை அதிகம் இருந்தால் தான் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும்.

இலங்கை அணி நோக்கம்
இதன் மூலம் ப்ளேயிங் 11ல் இலங்கை அணி தவறு செய்துள்ளது தெரியவருகிறது. எனினும் அவர்களின் பவுலர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணி புதிய சரித்திரம் படைக்கலாம். ஏனென்றால் இதுவரை இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை.


Click it and Unblock the Notifications