“கடைசில இப்படி கொண்டு வந்துட்டீங்களே”.. கோலிக்காகவே தயரான ஸ்பெஷல் பிட்ச்.. சதமடிக்க ஏற்பாடா?
பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் விராட் கோலி சதமடிப்பதற்காகவே அவருக்கு பிடித்தது போன்ற பிட்ச் உருவாகியுள்ளது.
Recommended Video
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது.

கோலி காத்திருப்பு
கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடிப்பார் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது 100வது டெஸ்டிலும் ஏமாற்றம் கொடுத்தார். இரண்டரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள விராட் கோலி, 2வது டெஸ்டிலாவது அந்த ஏக்கத்தை போக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வழிவிட்ட பிசிசிஐ
இந்நிலையில் பிசிசிஐயே அதற்கு வழிகாட்டியுள்ளது. அதாவது விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஸ்பின்னர்களிடம் தான் தடுமாறி வருகிறார். அவரால் சரியான திசையில் பந்தை திருப்ப முடியவில்லை. எனவே சின்னசாமி மைதான பிட்ச் முதல் மூன்று நாட்களுக்கு முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களின் பாட்ஷா எடுபடாதாம்.

பேட்டிங் பிட்ச்
டாஸ் வெல்லும் அணி இங்கு பேட்டிங் தேர்வு செய்யும். ஏனென்றால் அதிக ஸ்கோர் அடிக்கும் பேட்டிங் களமாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் விராட் கோலிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தான் சின்னசாமி ஸ்டேடியம். 2008ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை ஆர்சிபி அணிக்காக இந்த மைதானத்தில் தான் விளையாடி வருகிறார்.

கூடுதல் பலம்
விராட் கோலி கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்திருந்தார். அந்த சதமும் ஒரு பகலிரவு டெஸ்டில்தான் அடித்திருந்தார். எனவே நாளை தொடங்கும் இந்த பகழிரவு போட்டியில் தனது 2 ஆண்டு காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications