Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆச்சரியம்! கோலி விக்கெட்டை 12 மணி நேரம் முன்பே கணித்த ரசிகை.. சின்ன விஷயங்கள் கூட அப்படியே நடந்தன!

மொஹாலி: விராட் கோலி எப்படி விக்கெட் ஆவார், எவ்வளவு ஸ்கோர் அடிப்பார் என 12 மணி நேரத்திற்கு முன்பே ஒரு ரசிகை கணித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

ஆச்சரிய நிகழ்வு

ஆச்சரிய நிகழ்வு

விராட் கோலியின் 100வது போட்டி என்பதால், அவர் தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 45 ரன்களுக்கெல்லாம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரின் வீக்னஸ் பாய்ண்டாக பார்க்கப்படும் ஸ்பின்னர்களிடமே தனது விக்கெட்டை விட்டார். இந்நிலையில் இது ஒருபுறம் சோகமாக இருந்தாலும் அவரின் விக்கெட்டை 12 மணி நேரத்திற்கு முன்பே ஒருவர் கணித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ரசிகையிட் ட்விட்டர் பதிவு

ரசிகையிட் ட்விட்டர் பதிவு

இன்று அதிகாலை 12.46 மணிக்கு ட்வீட் ஒரு போட்டுள்ளார். அதில், கோலி தனது 100வது டெஸ்டில் சதமடிக்க மாட்டார். 100 பந்துகளில் 45 ரன்களை மட்டுமே அடிப்பார். 4 சிறப்பான கவர் ட்ரைவ்களை அடிப்பார். எம்புல்டேனியா பந்தில் ஸ்டம்ப் அவுட்டாவார். பின்னர் எப்படி அவுட்டானோம் எனப்புரியாமல் ஆச்சரியத்துடன் விழிப்பிதுங்கி நிற்பார் என அடித்துக்கூறியிருந்தார்.

அச்சு அசலாக நடந்தவை

அச்சு அசலாக நடந்தவை

இந்நிலையில் 12 மணி நேரத்திற்கு பிறகு, அவர் கூறியதை போன்று எம்புல்டேனியாவின் பந்தில் ஸ்டம்ப் அவுட்டானார். அதுவும் சரியாக 45 ரன்களை மட்டுமே அடித்தார். இதுமட்டுமல்லாம, அவர் கூறியதை போன்றே கோலி விழிப்பிதுங்கி நின்றுக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கையுடன் ரசிகர்கள்

நம்பிக்கையுடன் ரசிகர்கள்

இந்த போட்டியில் விராட் கோலிக்கு பெரும் ஏமாற்றம் என்றுதான் கூற வேண்டும். தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வதற்காக விராட் கோலி இரண்டரை ஆண்டு காலமாக காத்துள்ளார். 100வது டெஸ்டிலாவது அடிப்பார் என்று எதிர்பார்த்த போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனினும் 2வது இன்னிங்ஸில் சதமடிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Story first published: Friday, March 4, 2022, 16:26 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+