“கவர் ட்ரைவ் அடிப்பது தான் பிரச்சினையே”.. விராட் கோலியின் முக்கிய பலவீனம்.. பாக். சீனியர் எச்சரிக்கை
பெங்களூரு: விராட் கோலியிடம் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.
Recommended Video
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று மதியம் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
இந்த மைதானம் விராட் கோலி சதமடிப்பதற்காகவே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோலியின் 71வது சதம்
ஏனென்றால் விராட் கோலி தனது 71வது சதத்தை பூர்த்தி செய்ய இரண்டரை ஆண்டுகள் எடுத்துகொண்டுள்ளார். 2022ம் ஆண்டில் இதுவரை 3 அரைசதங்களை அடித்துள்ள விராட் கோலி, அவற்றியை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. இதற்கு அவருக்கு இருந்த கேப்டன்சி பிரச்சினை, ஃபார்ம் அவுட் போன்றவை காரணமாக கூறப்பட்டது.

கோலியின் வீக்னஸ்
இந்நிலையில் அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் பேசியுள்ளார். அதில், விராட் கோலியின் சோகங்கள் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. மற்ற பேட்ஸ்மேன்களை போட்டி சமயத்தில் ப்ளான் செய்து தூக்கும் எதிரணி பவுலர்கள், விராட் கோலிக்கு மட்டும் ஏற்கனவே போட்டு வைத்த அப்படியே செய்து விக்கெட் எடுத்துவிடுகின்றனர். அந்த அளவிற்கு ஒரே தவறை செய்கிறார்.

கோலியிடம் என்ன பிரச்சினை
விராட் கோலியின் விக்கெட் புள்ளிவிவரங்களை பார்க்க வேண்டும். அதாவது அவுட்சைட் ஆஃப் திசையில் வரும் பந்துகளை இவர் அதிக சிரமப்பட்டும் அடிக்க முற்படுகிறார். அதுவும் கவர் ட்ரைவுக்காக நன்கு திருப்பி பவுண்டரிக்கு மாற்ற நினைக்கிறார். இதனை புரிந்துக்கொள்ளும் பவுலர்கள் தொடர்ந்து அவரது நிதானத்தை சோதித்து விளையாடுகின்றனர்.

எப்படி சரி செய்வது
இதனை சரி செய்ய வேண்டும் என்றால் கோலி முதலில் டாட் பால்களை குறைக்க வேண்டும். அதிகப்படியான பந்துகளை அடித்து ஆடினால் தான் பவுலர்களின் எண்ணம் மாறும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக பேட்டிங் செய்வது சரியான விஷயம் தான். ஆனால் கோலி போன்று மிகவும் நிதானமாக ரன் சேர்ப்பது ஆபத்தான ஒன்று என ரஷித் லதிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications