“அடிப்படையே தெரியல..” விராட் கோலியை சீண்டி பார்த்த கம்பீர்.. 100வது டெஸ்டில் ரசிகர்கள் கொந்தளிப்பு!
மொஹாலி: விராட் கோலிக்கு அடிப்படை கூட தெரியவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சீண்டியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் முடிவில் 357 - 6 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.

100வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது விராட் கோலியின் இன்னிங்ஸின் தான். 100வது டெஸ்ட் போட்டியில் அவர் தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றார் போலவே விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பந்தையும் எந்தவொரு பதற்றமும் இன்றி கவர் ட்ரைவ் ஷாட்களை ஆடி அசத்தினார். ஆனால் ஒரே ஒரு பந்தை மட்டும் மிஸ் செய்துவிட்டார்.

விக்கெட் இழந்தது எப்படி?
எம்புல்டேனியா வீசிய ஓவரில் கவர் செய்து ஆட நினைத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தமாக் 76 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் மட்டுமே அடித்து அரைசதத்தை கூட தவறவிட்டார். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றத்தையே சந்தித்தனர். இந்நிலையில் கோலியின் சொதப்பலுக்கான காரணத்தை கம்பீர் கூறியுள்ளார்.

கம்பீரின் சீண்டல்
கோலியிடம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர் பேட்டை வைத்து நிற்கிறார் என்பதில் தான். அதாவது பேட்டை கால் பேடுகளுக்கு சற்று முன் தள்ளி வைத்து நின்றால் தான் டேர்ன் ஆகும் பந்துகளையும், அடிக்க முடியும், அதே சமயம் நேராக வரும் பந்துகளையும் தடுக்க முடியும். ஆனால் விராட் கோலி கால் பேடுகளுக்கு அருகிலேயே பேட்டும் ஒட்டி வைத்துள்ளார். இதனால் வேகமாக ரியாக்ட் செய்ய முடியாமல் எட்ஜாவார்கள்.

அடிப்படை விஷயம்
டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை விஷயம் இதுவாகும். ஆனால் சமீப காலமாக 20 ஓவர், 50 ஓவர் கிரிக்கெட்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளையே மறந்துவிடுகின்றனர். முக்கியமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்களால் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பதில் மட்டும் தற்போது கவனம் செலுத்துகின்றனர். எனவே இனி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications