
கோலியின் மைல்கல்
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இந்தியாவை கொண்டு சென்றவர் விராட் கோலி. அவர் விளையாடப்போகும் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்காக மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோலியின் சதத்திற்கான இரண்டரை ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வரலாம்.

இலங்கையின் காத்திருப்பு
இந்த போட்டி இலங்கை அணியின் சரித்திரத்தை மாற்றி அமைக்கலாம். அந்த அணி விளையாடப்போகும் 300வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை இந்திய மண்ணில் இந்திய அணியை இலங்கை ஒரு முறை கூட தோற்கடித்தது கிடையாது. மேலும் கடந்த 7 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் வெற்றியை கூட இந்தியாவுக்கு எதிராக பெறவில்லை. இதனால் இந்த வரலாற்றை மாற்றி அமைக்க இலங்கை முணைப்பு காட்டுகிறது.

ரோகித் கேப்டன்சி
இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி புதிய மாற்றம் பெறப்போகிறது. ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படவுள்ள முதல் போட்டி இதுவாகும். தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி தோற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பின் தங்கியுள்ளது. எனவே இதில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற காத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ரகானே - புஜாரா இல்லமால் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய மிடில் ஆர்டருடன் இந்தியா களமிறங்குகிறது.

போட்டி எங்கு, எப்போது
இந்த போட்டி சரியாக நாளை காலை 9.30 மணிக்கு மொஹாலியில் தொடங்கவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் செயலில் பார்க்கலாம். மேலும் மைக்கேல் தமிழ் வலைதளத்திலும் போட்டி குறித்த சுவாரஸ்ய செய்திகளை பார்த்துத்தெரிந்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications