Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத திருப்பம்..பவுலிங் திட்டத்தில் டிராவுட் மாற்றம்.. இலங்கை தொடருக்கான பிட்ச் ரிப்போர்ட்

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடும் பாதுகாப்பு வசதிகளுடன் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

போட்டிகள் விவரம்

போட்டிகள் விவரம்

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இலங்கை வீரர்கள் கொரோனா காரணமாக, ஒரு வாரம் தனிமை முகாமிற்குச் சென்றதால், ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, ஒருநாள் போட்டிகள் ஜூலை 18, 20, 23ம் தேதிகளிலும், டி20 போட்டிகள் ஜூலை 25, 27, 29ம் தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா - இலங்கை அணிகளின் அனைத்து போட்டிகளுமே கொழும்புவில் உள்ள ப்ரேமதசா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த பிட்ச்சானது இந்தியாவில் உள்ளது போல சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கு வேகப்பந்துவீச்சாளர்களை குறைத்துக்கொண்டு ஸ்பின்னர்களை அதிகளவில் களமிறக்க வேண்டும்.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

இதன் காரணமாக இந்திய அணியில் 3 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜோடி மீண்டும் டி20 போட்டியில் சேருகிறது. இவர்களுடன் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவையும் சேர்த்து களமிறக்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டம் போட்டுள்ளார்.

Recommended Video

Ind Vs SL Two Wickets In An Over For Kuldeep Yadav | Oneindia Tamil
ஃபாஸ்ட் பவுலர்கள்

ஃபாஸ்ட் பவுலர்கள்

3 ஸ்பின்னர்களை களமிறக்குவதால், 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே ப்ளேயிங் 11ல் இடம்பெறவுள்ளனர். அதன்படி பார்த்தால் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சஹார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளடு. இவர்கள் 2 பேருக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவும் பந்துவீச்சில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

Story first published: Saturday, July 17, 2021, 19:47 [IST]
Other articles published on Jul 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+