
இந்தியா அபாரம்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுக்க, இலங்கை 109 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனால் 447 என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை அணி திணறி வருகிறது.

அஸ்வினின் சாதனை
இப்போட்டியின் வெற்றியை விட அஸ்வினின் சாதனை தான் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் ஷேன் வார்னே, டேல் ஸ்டெயினின் சாதனையை தகர்த்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்தவர்களின் பட்டியலில் அஸ்வின் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 440 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். டேல் ஸ்டெயின் 93 போட்டிகளில் 439 விக்கெட்களை தான் எடுத்திருந்தார்.

வீரர்களின் பட்டியல்
அதிக டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியலில் கடந்த மொஹாலி டெஸ்டில் தான் கபில் தேவை முந்தி 2வது இடம் பிடித்தார். தற்போது சர்வதேச அளவில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதிக விக்கெட்கள் எடுத்தவர்களின் பட்டியலை பார்க்கலாம்.
முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்
ஷேன் வார்னே - 708 விக்கெட்கள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 640 விக்கெட்கள்
அனில் கும்ப்ளே - 619 விக்கெட்கள்
க்ளென் மெக்கிராத் - 563 விக்கெட்கள்
ஸ்டூவர்ட் பிராட் - 537 விக்கெட்கள்
கேர்னி வால்ஷ் - 519 விக்கெட்கள்
அஸ்வின் - 440 விக்கெட்கள்
Recommended Video

வார்னே சாதனை தகர்ப்பு
இதே போல இலங்கைக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் எடுக்கும் 60வது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் ஒரு ஆசிய நாட்டிற்கு எதிராக அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் ஷேன் வார்னேவை முந்தி 4வது இடம் பிடித்துள்ளார். வார்னே 59 விக்கெட்கள் எடுத்திருந்தார். இப்பட்டியலில் கும்ப்ளே 74 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











