Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரவில் நடந்த அவசர மீட்டிங்! கோலியால் பிசிசிஐக்கு வந்த தலைவலி..100வது டெஸ்டில் கங்குலி தோற்றது எப்படி

மொஹாலி: விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியினால் பிசிசிஐ-க்குள் பெரும் பிரச்சினையே நடந்துள்ளது எனத்தெரியவந்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்ததை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொடங்கவுள்ளது.

கோலிக்கு ஸ்பெஷல்

கோலிக்கு ஸ்பெஷல்

இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனென்றால் இது அவர் விளையாட போகும் 100வது டெஸ்ட் ஆகும். இந்திய கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்ட முடிகிறது. எனினும் கோலியின் 100வது ஆட்டத்தை கொண்டாட பிசிசிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

திடீர் அறிவிப்பு

திடீர் அறிவிப்பு

ரசிகர்களுக்காவது போட்டியை காண அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று காலை திடீரென பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், வழக்கம் போல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கங்குலியின் பகை

கங்குலியின் பகை

இதனையடுத்து அனைவரின் கவனமும் கங்குலி மீது திரும்பியது. ஒரு வீரருக்கு பெரிய கவுரவமாக பார்க்கப்படும் 100வது டெஸ்ட் போட்டிக்கு பிசிசிஐ இப்படி செய்தது நியாயமே இல்லை என முன்னாள் வீரர்களே கூறினர். கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்தார். கங்குலி தனது தனிப்பட்ட பகையை மனதில் வைத்துக்கொண்டு கோலிக்கு இதுபோன்று இடையூறுகள் கொடுப்பதாக ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

ஏற்கனவே பிசிசிஐ மீது பல சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், கோலியின் விஷயத்தில் மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனையடுத்து பிசிசிஐ-ன் உயர்மட்ட குழு நேற்று அவசர அவசரமாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில் 50% அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முடிவெடுத்து தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

Recommended Video

IND vs SL Rohit Sharma Will Change The Total Batting Order Of Team India : Reports | Oneindia Tamil
கங்குலியின் தோல்வி

கங்குலியின் தோல்வி

பிசிசிஐ-க்குள் நடக்கும் பிரச்சினை வெளியுலகிற்கு வரும்போதும், அதன் முடிவு மட்டும் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொடுக்கும் அழுத்தத்தால் ஒரு தனிப்பட்ட வீரரை தாக்க முடியாது என்பது நிரூபனம் ஆகியுள்ளது.

Story first published: Wednesday, March 2, 2022, 10:50 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+