கோலி - 4, ஸ்ரேயாஸ் - 5... பேட்டிங் வரிசையில் இனி மாற்றம்.. முதல் டெஸ்டிலேயே ரோகித் சர்மா அதிரடி
மொஹாலி: இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொடங்கவுள்ளது.

முதல் ஆட்டமே மாற்றம்
ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி விளையாடப்போகும் முதல் டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது. இந்திய அணி கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்க தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே தனது கேப்டன்சியின் முதல் போட்டியில் இருந்தே அணியின் ப்ளேயிங் 11 வடிவத்தை மாற்றவுள்ளார் ரோகித்.

ஓப்பனிங்
அதாவது ஓப்பனிங்கிற்கு வழக்கமாக ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் விளையாடுவார்கள். ராகுல் இல்லையென்றால் சுப்மன் கில் தான் ஆடுவார். ஆனால் இந்த முறை சுப்மன் கில்லை மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்படவுள்ளார். ஓப்பனிங்கில் ரோகித்துடன் இனி மயங்க் அகர்வால் விளையாடவுள்ளார்.

மிடில் ஆர்டர்
இதன் பின்னர் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கி வரும் விராட் கோலியை இனி 4வது வீரராக தள்ளிவைக்கப்போகிறார். அவரின் இடத்திற்கு தான் சுப்மன் கில் விளையாடவுள்ளார். 3 அல்லது 4வது இடத்தில் இறங்க வேண்டிய ஸ்ரேயாஸ் ஐயர் இனி 5வது நபராக விளையாடுவார். ரிஷப் பண்ட் 6வது வீரர்.

பவுலிங் ஃபார்முலா
பந்துவீச்சை பொறுத்தவரையில் வழக்கமான ஃபார்முலாவான 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என மொத்தம் 5 பேருடன் மட்டும் பயன்படுத்தவுள்ளதாக தெரிகிறது. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஒருவர் கூட இல்லாமல், அணியின் மொத்த பேட்டிங் வரிசையையும் மாற்றுவது எந்த அளவிற்கு உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Recommended Video

இந்திய ப்ளேயிங் 11
ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


Click it and Unblock the Notifications