
குழப்பத்தில் ரோகித்
ரோகித் சர்மா டெஸ்ட் கேப்டனாக செயல்படவுள்ள முதல் போட்டி இதுவாகும். ஆனால் இந்த போட்டியிலேயே அவருக்கு பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் ரகானே - புஜாரா ஆகியோர் இல்லாதது தான். அவர்கள் இருவரின் இடங்களை யார் நிரப்புவார்கள் என்பதில் தான் போட்டியே நிலவி வருகிறது.

3 பேருக்கு இடையே போட்டி
கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் மயங்க் அகர்வால் களமிறங்கவுள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருக்கின்றனர். ஆனால் அந்த 2 இடங்களுக்கு தான் 3 பேர் போட்டி போடுகின்றனர். முதல் விக்கெட்டிற்கு சுப்மன் கில்லை களமிறக்க வாய்ப்புகள் உள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் கில் இதுவரை பெரிதாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அதுவும் அவர் ஓப்பனிங் வீரர் என்பதால் முதல் விக்கெட்டிற்கு களமிறக்கப்படலாம்.

ஸ்ரேயாஸ்
இந்திய கிரிக்கெட்டில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றார். இவர் டெஸ்டிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இவரை புறக்கணிக்க ரோகித் சர்மாவிடம் எந்தவொரு காரணமும் இல்லை.
Recommended Video

ஹனுமா விஹாரி
இதன் பின்னர் ஹனுமா விஹாரி இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்திய அணி அயல்நாடுகளில் சிக்கிய போதெல்லாம், ஹனுமா விஹாரி பெரும் உதவி செய்துள்ளார். புஜாராவை போன்று நன்கு தடுப்பாட்டம் ஆடி ரன்களை குவிக்கக்கூடியவர். இவரை முதல் விக்கெட்டிற்கு களமிறக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில் எந்த 2 வீரர்களை ரோகித் தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications