Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் பேட்டிங் இடம் மாற்றம்... முதல் போட்டியிலேயே ரோகித் அதிரடி.. காரணம் இளம் வீரர் தான்!

மொஹாலி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலியின் பேட்டிங் வரிசையை மாற்றுகிறார் ரோகித் சர்மா.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இந்த தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இதற்கான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்யும் பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. விராட் கோலி கேப்டனாக இருந்த வரையில் வழக்கமாக முதல் விக்கெட்டிற்கு அவர் களமிறங்குவார். அதாவது 3வது வீரராக விளையாடுவார். இந்நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

ரோகித் அதிரடி முடிவு

ரோகித் அதிரடி முடிவு

அதாவது முதல் விக்கெட்டிற்கு இனிமேல் சுப்மன் கில்லை களமிறக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. முதல் டெஸ்டில் இருந்து இனி விராட் கோலி 4வது நபராக விளையாடவிருக்கிறார். இதனை இந்திய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் சண்டை?

மீண்டும் சண்டை?

ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றதில் இருந்து கோலியின் விவகாரத்தில் மட்டும் எந்தவித மாற்றம் செய்யாமல் இருந்தார். இதனால் அவர்களுக்குள் எந்தவித உள்பகையும் இல்லை என ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் தற்போது, கேப்டனாக செயல்படவுள்ள முதல் போட்டியிலேயே கோலியின் இடத்தில் கைவைத்துள்ளார்.

Recommended Video

IND vs SL : T20 Cricket-ல் புதிய சாதனை படைத்த Rohit Sharma
இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

கடந்த சில வருடங்களாக விராட் கோலிக்கான சிறந்த இடமாக முதல் விக்கெட் தான் இருந்து வருகிறது. அதனைவிட்டால், ஓப்பனிங்கில் தான் விளையாடுவார். மற்ற இடங்களில் விளையாடினால் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதனால் இந்த முடிவு எந்தளவிற்கு சரியாக இருக்கும் என்பது குழப்பம் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, March 1, 2022, 14:32 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+