Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி அஸ்திவாரத்தையே சரிக்கக்கூடிய வீரர்.. இலங்கை அணியின் ஒரே ஒரு ஸ்பின்னர்..அசத்தல் ரெக்கார்ட்

மொஹாலி: இந்திய அணியின் அஸ்வாரத்தையே சரிக்ககூடிய வகையில் ஒரே ஒரு ஸ்பின்னர் மீது நம்பிக்கை வைத்து களமிறங்கியுள்ளது இலங்கை அணி.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடி வருகிறது.

 இலங்கை எடுத்த ரிஸ்க்

இலங்கை எடுத்த ரிஸ்க்

முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. அந்த அளவிற்கு பிட்ச்சனாது சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் எனத்தெரிகிறது. ஆனால் இலங்கை அணியோ ஒரே ஸ்பின்னர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் களமிறங்கியுள்ளது. இதற்கு காரணம் அவர்களிடம் உள்ள ஸ்பின்னர் லசித் எம்புல்டேனியா 3 ஸ்பின்னர்களுக்கு சமம் ஆவார்.

அப்படி யார் அவர்

அப்படி யார் அவர்

25 வயதே ஆகும் எம்புல்டேனியா இலங்கை டெஸ்ட் அணியின் மிகப்பெரிய தூணாக சமீப காலமாக இருந்து வருகிறார். இதற்கு சான்று அவரின் ரெக்கார்ட்களே ஆகும். இடதுகை ஆர்தோடாக்ஸ் ஸ்பின்னரான எம்புல்டேனியா, இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் 63 விக்கெட்களை அதில் சாய்த்துள்ளார்.

அசத்தல் ரெக்கார்ட்கள்

அசத்தல் ரெக்கார்ட்கள்

இந்த 63 விக்கெட்களில் பல ரெக்கார்ட்கள் ஒளிந்துள்ளன. 5 முறை 5 விக்கெட் ஹவுல் எடுத்துள்ளார். மற்றும் ஒரு போட்டியில் 10 விக்கெட்களையும் இவரே எடுத்து அசத்தியுள்ளார். சர்வதேச போட்டியில் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய ரெக்கார்ட் என்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பலம் என்ன

பலம் என்ன

எம்புல்டேனியாவுடைய சிறப்பு, அவர் ஒரு இடதுகை ஆர்தோடாக்ஸ் ஸ்பின்னர் என்பதுதான். இந்திய அணியில் பெரும்பாலும் வலதுகை பேட்ஸ்மேன்கள் தான் அதிகம். எனவே அவர்களை திணறடித்து அடுத்தடுத்து விக்கெட்களை எடுப்பதில் வல்லவராக இருந்து வருகிறார். இதே விஷயத்தில் தான் இந்திய வீரர் ஜடேஜாவும் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 4, 2022, 14:03 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+