“அது எவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா??” கோலிக்கு எதிராக பிசிசிஐ எடுத்த முடிவு.. கவாஸ்கர் கடும் அதிருப்தி!
மொஹாலி: விராட் கோலிக்கு எதிராக பிசிசிஐ எடுத்துள்ள முடிவுக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்ததை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ம் தேதி முதல் மொஹாலியில் தொடங்கவுள்ளது.

கோலிக்கு ஸ்பெஷல்
இந்த டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். ஏனென்றால் இது அவர் விளையாட போகும் 100வது டெஸ்ட் ஆகும். இந்திய கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்ட முடிகிறது. எனினும் கோலியின் 100வது ஆட்டத்தை கொண்டாட பிசிசிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திடீர் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளதால், முதல் டெஸ்டிற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் எனக்கூறப்பட்டது. இதனால் கோலியும் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் இன்று காலை திடீரென பார்வையாளர்கள் யாருக்குமே அனுமதி கிடையாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது கங்குலியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

கவாஸ்கர் கடும் அதிருப்தி
இந்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு நடிகன், விளையாட்டு வீரர் என யாராக இருந்தாலும், சுற்றி ரசிகர்கள் இருந்தால் தான் புத்துணர்ச்சியுடன் விளையாடுவார்கள். ஆனால் இந்திய அணி சமீப காலமாக ஒரு போட்டியில் கூட ரசிகர்களின் பங்கேற்போடு விளையாடவில்லை. குறைந்தபட்சம் கோலியின் 100வது போட்டிக்காவது அனுமதி அளிக்காதது நியாயமல்ல.

ஸ்பெஷல் போட்டி
100வது போட்டி என்பது மிகவும் ஸ்பெஷலான ஒன்று தான். ஆனால் பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
Recommended Video

பழைய பகை
பிசிசிஐ-க்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள பிரச்சினை தான் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் மொஹாலியில் தினசரி 30 - 40 பேருக்கு கொரோனா உறுதியாகிறது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications