தவானுடன் சேர்த்து 8 வீரர்கள் இல்லை.. டி20 போட்டியில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. ரசிகர்கள் ஷாக்
கொழும்பு: கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அணி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, ஒரு நாள் போட்டி தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றது.
இரு அணிகளும் தற்போது மோதி வரும் டி20 தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வென்று 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டி20ல் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.

கொரோனா
2வது டி20 போட்டி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஜுலை.27) உறுதி செய்யப்பட்டது. இதனால், நேற்றே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அணி வீரர்கள் பலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குவாரண்டைனில் வீரர்கள்
இதில், வேறு எந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, 2வது டி20 போட்டி திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என்று தெரிகிறது. அதேசமயம், க்ருனால் பாண்ட்யாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 வீரர்கள்
இந்நிலையில் அந்த 8 வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷான், கிருஷ்ணப்பா கவுதம், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, யுவேந்திர சாஹல் மற்றும் கேப்டன் ஷிகர் தவான். அணியின் முக்கிய வீரர்கள் விளையாடவில்லை என்பதால், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

யார் கேப்டன்?
ஷிகர் தவான் விளையாட காரணத்தினால், 2வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் தான் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவங்களை கொண்ட வீரரான புவனேஷ்வர் குமார். எனினும் இவர் முற்றிலும் புதுமுக வீரர்களை கொண்ட அணியை எப்படி வழிநடத்தி வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications