For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SL - டி20 போட்டிகளை எந்த சேனலில் பார்ப்பது? டிஸ்னி ஹாட் ஸ்டார் கிடையாது.. வேறு எந்த ஓடிடி?

பாலக்கல்லே : இந்தியா,இலங்கை அணிக்கு இடையிலான டி20 தொடர் வரும் 27ஆம் தேதி பாலக்கல்லேவில் தொடங்குகிறது. சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.

இதனால், தற்போது ஹர்திக் பாண்டியா, கில்,சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றிருக்கிறார்கள். முதல் முறையாக பயிற்சியாக கம்பீர் தலைமை தாங்கி இருப்பதால் இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் தொடங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ind vs sl india squad cricket vs Gautam Gambhir

இலங்கை அணியும் தற்போது தடுமாற்ற நிலையில் தான் இருக்கின்றது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் தமது கேப்டன் பதவியை ஹசரங்கா ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஷரித் அசலங்கா இலங்கை அணியின் டி20 கேப்டன் ஆக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் பாணியில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையான இலங்கை வீரர்கள் இந்த தொடரில் அதிரடியாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். தற்போது அனைவரும் நல்ல பார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு இந்த தொடர் ஒரு கேக் வாக் (எளிமையாக) போல் இருக்காது.

இதனால் இந்த தொடரில் வெற்றி பெற இந்தியாவில் கடுமையாக போராட வேண்டிய நிலையில் இருக்கும். முதல் டி20 போட்டி சனிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஆன்லைனில் பார்க்க வேண்டும் என்றால் சோனி லிவ் ஆப்பை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அதற்கு காசு கட்ட வேண்டும். இதனால் இந்த போட்டிகளை ஆன்லைனில் இலவசமாக பார்க்க வேண்டும் என்றால் ஜியோ டிவி ஆப்பில், sony சேனல்களை வைத்து நேரலையில் பார்க்கலாம். இந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டால், அவரே 2026 ஆம் ஆண்டு வரை டி20 உலக கோப்பையில் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 25, 2024, 14:31 [IST]
Other articles published on Jul 25, 2024
English summary
India vs srilanka T20 series Where to Watch live streaming details - டி20 இந்தியா இலங்கை டி20 போட்டிகளை எந்த சேனலில் பார்ப்பது? டிஸ்னி ஹாட் ஸ்டார் கிடையாது.. வேறு எந்த ஓடிடி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+