மீண்டும் புதுமுக வீரர்.. 3வது டி20ல் ஷிகர் தவானின் அதீத நம்பிக்கை.. சவால் கொடுக்கும் ப்ளேயிங்!
கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டி20 தொடரில் முதல் போட்டியை இந்தியாவும், 2வது போட்டியை இலங்கையும் கைப்பற்றி 1 -1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

ஓப்பனிங்
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கொரோனா காரணமாக பல முக்கிய வீரர்கள் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். இதனல் இந்த போட்டிக்காக இந்திய அணி 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓப்பனிங்கை பொறுத்தவரை ஷிகர் தவான், ருத்ராஜ் கெயிக்வாட் களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு தேவ்தத் பட்டிக்கல் களமிறங்குகிறார்.

கடைசி வாய்ப்பு
மிடில் ஆர்டரை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் 5வது வீரராகவும், நிதிஷ் ராணா 6வது வீரராகவும் களமிறங்குகிறார்கள். கடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் இன்று அவருக்கான 2வது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே போல நிதிஷ் ராணாவுக்கும் இது கடைசி வாய்ப்பாக உள்ளது.

புதுமுக வீரர்
பவுலிங்கை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சேட்டன் சகாரியா, ராகுல் சஹார் களமிறங்குகின்றனர். நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் சந்தீப் வாரியர் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11
ஷிகர் தவான், ருத்ராஜ் கெயிக்வாட், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், சந்தீப் வாரியர், சேட்டன் சகாரியா, வருண் சக்கரவர்த்தி


Click it and Unblock the Notifications