Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. டாஸ் வென்றது இந்திய அணி.. ப்ளேயிங் 11ல் எதிர்பாராத ட்விஸ்ட்- விவரம்

மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டி விராட் கோலி விளையாடப்போகும் 100வது டெஸ்ட் என்பதா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் 50 % பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

ரோகித் சர்மாவின் கேப்டன்சி செய்யப்போகும் முதல் டெஸ்ட் என்பதால் அதிரடி மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் மயங்க் அகர்வால் களமிறங்கவுள்ளார். புஜாராவின் இடமான முதல் விக்கெட்டிற்கு யாரை களமிறக்குவதில் தான் குழப்பமே இருந்தது.

புஜாராவின் இடம்

புஜாராவின் இடம்

இளம் வீரர் சுப்மன் கில்லை முதல் விக்கெட்டிற்கு களமிறக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக வாய்ப்புகாக காத்திருக்கும் ஹனுமா விஹாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. 4வது வீரராக விராட் கோலி மற்றும் 5வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவிருக்கின்றனர். விக்கெட் கீப்பர் பண்ட்-க்கு இது தன்னை நிரூபிக்க வேண்டிய போட்டியாக அமைந்துள்ளது.

பந்துவீச்சில் ட்விஸ்ட்

பந்துவீச்சில் ட்விஸ்ட்

பந்துவீச்சை பொறுத்தவரையில் தான் இந்திய அணி ட்விஸ்ட் கொடுத்துள்ளது. அதாவது இந்த முறை 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற ஃபார்முலாவுடன் களமிறங்கியுள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் முதன்மை ஸ்பின்னர்களாக உள்ளனர். ஜெயந்த் யாதவ் கூடுதல் ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகிய 2 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். சிறப்பான ஃபார்மில் உள்ள முகமது சிராஜ் ஏமாற்றமடைந்துள்ளார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்த பிட்ச்-ஐ பொறுத்தவரையில் டாஸ் வென்று பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக அமையும். எனவே அந்த வகையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400+ ரன்களை குவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்திய மண்ணில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணியை இலங்கை வீழ்த்தியதில்லை. இதனால் வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், பும்ரா, முகமது ஷமி

Story first published: Friday, March 4, 2022, 9:25 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+