Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் 100வது டெஸ்ட்டில் மாற்றம்..! இலங்கை கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ.. புதிய அட்டவணை வெளியீடு

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.

இலங்கை அணி முதலில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் டி20 போட்டியில் தற்போது இலங்கை அணி விளையாடுகிறது.

அங்கிருந்து நேரடியாக வந்து டெஸ்ட்டில் விளையாட கடினமாக இருக்கும் என்பதால், முதலில் டி20 தொடரை நடத்துங்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

3 நாள் ரெஸ்ட்

3 நாள் ரெஸ்ட்

இதனை ஏற்று கொண்ட பிசிசிஐ தற்போது அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. தற்போது டி20 போட்டிகள் முதலில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் வரும் 20ஆம் தேதியோடு முடிவடைகிறது.இதனைத் தொடர்ந்து வெறும் 3 நாள் இடைவெளியில் இலங்கை தொடர் தொடங்குகிறது.

அட்டவணை

அட்டவணை

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் டி20 போட்டி லக்னோவிலும். வரும் 26ஆம் தேதி 2வது டி20 தர்மசாலாவிலும், அடுத்த நாளே 3வது டி20 அதே தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வரும் மார்ச் 4ஆம் தேதி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் மொஹாலியில் நடைபெறும்.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

இதனைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக முதல் டெஸ்ட் தான் பகல் இரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது விராட் கோலியின் 100வது டெஸ்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

100வது டெஸ்ட்

100வது டெஸ்ட்

ஆனால், தற்போது முதல் டெஸ்ட் மொஹாலியில் நடைபெறுவதால், விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாக அது அமையும். இந்தப் போட்டியை பெரிய அளவில் கொண்டாட பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. கேப்டன்ஷிப் விவகாரத்தில் கிங்குலி, ஜெய்ஷா மீது அதிருப்தியில் விராட் கோலி ரசிகர்கள் உள்ளனர். அவர்களை கூல் செய்ய இந்த திட்டத்தை பிசிசிஐ அமல்படுத்தப்பட உள்ளது.

Story first published: Tuesday, February 15, 2022, 19:58 [IST]
Other articles published on Feb 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+