Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையில் நீங்க எத்தனை ஸ்பின்னர்கள் வைத்தாலும், இவர் இல்லனா இந்திய அணி வேஸ்ட்.. EX வீரர் கருத்து

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவுக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தீப் தாஸ்குப்தா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அணிக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான விளையாடும் லெவனில் அவரை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தற்போது இங்கிலாந்திலேயே தங்கியிருக்கும் குல்தீப், அங்கு நடைபெற்று வரும் ஒருநாள் கோப்பை போட்டிகளில் யார்க்‌ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார்.

India vs srilanka

யார்க்‌ஷயர் அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

ஆகஸ்ட் 15 முதல் தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குல்தீப் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய தீப் தாஸ்குப்தா, "குல்தீப் யாதவ் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். நான் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைப் பற்றிப் பேசுகிறேன், அதில் நீங்கள் நிச்சயமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவீர்கள்."

"நான் அவரை இங்கிலாந்தில் பார்த்தேன், பலரும் அவரைப் பார்த்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அணியைத் தேர்வு செய்யும் நபர்கள் அவரைப் பார்க்கவில்லை, அது வேறு விஷயம்" என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

"இது ஒரு நல்ல அணி என்று நான் நினைக்கிறேன். ஆடுகள சூழலுக்கு ஏற்ப, வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாகவும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சில நேரங்களில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூட விளையாடுவதற்கான வாய்ப்புகள் அமையலாம். இலங்கையில் இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. எனவே, அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் இருப்பது அவசியமானது. காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் இல்லாத நிலையில், இந்த தேர்வு எதிர்பார்த்தபடியே அமைந்துள்ளது" என்றும் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 2, 2026, 11:10 [IST]
Other articles published on Aug 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+