இளம் வீரரின் சிம்பிள் ஸ்கெட்ச்.. வசமாக சிக்கிய விராட் கோலி.. 100வது டெஸ்டில் இப்படி ஒரு ஏமாற்றமா?
மொஹாலி: இலங்கை அணியின் இளம் வீரர் ஒருவர் போட்ட ஸ்கெட்ச்சால் விராட் கோலி ஏமாந்துப்போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சிறப்பான அடிதளத்தை அமைத்து விளையாடி வருகிறது.

100வது டெஸ்ட்
விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அவரின் பேட்டிங் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி இந்திய அணி 80 ரன்களுக்குள் 2வது விக்கெட்டை இழந்த போது விராட் கோலி களத்திற்குள் நுழைந்தார். எந்தவித பதற்றமும் இன்றி விராட் கோலி அடித்த கவர் ட்ரைவ் ஷாட்களை ரசிகர்களால் பார்க்க முடிந்தது. மேலும் பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்கள் வரை எட்டியது.

ஏமாந்த ரசிகர்கள்
இதனால் இன்று விராட் கோலி தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக இந்த ஒரு சதத்தை அடிப்பதற்காக தான் கோலி சிரமப்பட்டார். ஆனால் இன்றும் அது நடைபெறவில்லை. 76 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டாகி வெளியேறினார்.

அட்டகாசமான கவர் ட்ரைவ்ஸ்
மிகவும் கடினமான பந்துகளை கூட கவர்ட்ரைவ்களாக மாற்றி வந்த கோலி, துரதிஷ்டவசமாக ஒரு சாதாரண பந்தில் அவுட்டானார். ஆனால் அங்கு தான் இலங்கை ஸ்பின்னர் லசித் எம்புல்டேனியாவின் திட்டமே இருந்தது. அதாவது மிடில் ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப் திசையில் போடும் பந்துகளை விராட் கோலி அசால்டாக கட் ஷாட் மூலம் அடித்துவிடுகிறார்.

சிம்பிள் யோசனை
இதனால் ஆட்டத்தின் 43.3 வது ஓவரில் சற்று வித்தியாசமாக யோசித்த எம்புல்டேனியா, குட்லெந்த்தில் ஒரு பந்தை போட்டார். அந்த பந்து மிகவும் சாதாரணமான டெலிவரி ஆகும். ஆஃப் ஸ்டம்பை நோக்கி சென்றது. ஆனால் இந்த பந்தும் உடலுக்கு உள்ளே போடப்படும் என கோலி நன்கு விலகி நின்றிருந்தார். இதனால் நேராக வந்த பந்து ஆஃப் ஸ்டம்பில் பட்டு விக்கெட்டை பறித்தது.

ரசிகர்களின் அதிருப்தி
மிகப்பெரிய பவுலர்களை எதிர்கொண்ட விராட் கோலிக்கு, 26 வயதே ஆகும், இளம் ஸ்பின்னரின் சின்ன ப்ளானை கணிக்க முடியவில்லை. இதனால் அவரின் 71வது சதத்திற்கான காத்திருப்பு நீண்டு வருகிறது. இப்போட்டியில் இலங்கை பயன்படுத்தும் ஒரே ஒரு ஸ்பின்னர் எம்புல்டேனியா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications