பயிற்சியின் போது திடீர் சத்தம்.. ரசிகர்கள் வைத்த கோரிக்கை.. உடனே நிறைவேற்றிய கோலி.. நெகிழ்ச்சி செயல்
பஞ்சாப்: மொஹாலியில் வலைப்பயிற்சியில் இருந்த விராட் கோலி, இளம் ரசிகர்களுக்காக செய்த விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரின் போது ஓய்வுக்காக வெளியேறிய விராட் கோலி, இலங்கை டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை.
நேரடியாக இலங்கை அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதாக அறிவித்தார்.

இலங்கை டெஸ்ட் தொடர்
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று மொஹாலி சென்றடைந்த விராட் கோலி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு ஏற்கனவே ரிஷப் பண்ட், அஸ்வின், உமேஷ் யாதவ், சுப்மன் கில், முகமது ஷமி, ஹனுமா விஹாரி ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் நேற்று கோலி வலைப்பயிற்சிக்கு சென்ற போது தான் சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மைதானத்தின் வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த இளம் ரசிகர்கள் சிலர் கோலியை பார்க்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். மேலும் அவரின் ஆட்டோகிராஃபும் போட்டு தருமாறு கோரி வந்தனர். இது உள்ளே இருந்த கோலிக்கு எப்படியோ கேட்டுள்ளது.

என்ன செய்தார் கோலி
இதனையடுத்து திடீரென மைதான பாதுகாவலர்களை தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தார். பின்பு, அந்த ரசிகர்களின் ஜெர்ஸிகளை வாங்கிக்கொண்டு வாருங்கள் எனக்கூறிவிட்டு சென்றார். இதன்பின்னர் தனது அறைக்கு செல்லாத கோலி, மைதானத்திலேயே நின்றிருந்து, ஜெர்ஸிகள் வந்தவுடன் அதன் பின் புறத்தில் தனது ஆட்டோகிராஃபை போட்டுக்கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கொரோனா பயோ பபுள் விதிமுறைகளால் அவரால் நேரடியாக ரசிகர்களை காண முடியவில்லை.

ரசிகரின் நெகிழ்ச்சி பேச்சு
கோலியின் இந்த செயலால் நெகிழ்ச்சியடைந்த அந்த ரசிகர் ஒருவர், கோலியின் ஆட்டோகிராஃப் கிடைக்கும் என நான் நினைத்துப்பார்க்கவே இல்லை. எங்களின் கோரிக்கையை பொறுமையாக கேட்டு அதனை செய்துக்கொடுத்தார். அவரை காண வேண்டும் என வந்தேன். ஆனால் தற்போது ஆட்டோகிராஃப் அதனைவிட பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனக்கூறியுள்ளார்.
Recommended Video

விமர்சனங்கள் பொய்யானது
விராட் கோலி மிகவும் கோபக்காரார், எப்போதும் ஆக்ரோஷமாகா சுற்றி வருவார் என பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனால் தனது ரசிகர்களிடம் எப்போதுமே அவர் நிதானமாக தான் நடந்துக்கொண்டு வருகிறார். இதற்கு முன்னர் பல சமயங்களில் ரசிகர்களுக்காக பொருமையாக நின்று போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications