Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs USA: இந்திய அணியை நாங்கள் வீழ்த்திருப்போம்.. கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி- அமெரிக்க கேப்டன் பட்டேல்

மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் ஆன பலம் வாய்ந்த இந்திய அணிக்கு அமெரிக்கா கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் அமெரிக்க அணி அபாரமாக பந்து வீசி இந்தியாவை திணற வைத்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சூரியகுமாரின் அதிரடியான ஆட்டத்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் தப்பித்தது. மேலும் பேட்டிங்களும் அபாரமாக செயல்பட்ட அமெரிக்க அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அணி கேப்டன் மோனாங் பட்டேல், எங்கள் அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. எனினும் பவர் பிளேவில் எங்களுடைய பவுலர்கள் பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீசினார்கள். அது அவர்களுக்கு பெரும் அளவு கை கொடுத்தது. இதன் காரணமாக நாங்கள் இந்திய அணியை மிகவும் அமைதியாக களத்தில் வைத்திருந்தோம். முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம்.

அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டு விட்டார்கள். இந்த ஆடுகளத்திற்கு அந்த இலக்கு நல்லது தான். இதே போல் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் டாப் 3 வீரர்களுமே சரியாக செயல்படவில்லை.

ஆரம்பத்தில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை தவற விட்டதால், எங்கள் அணிக்கு அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது.எனினும் இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அதனை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்வோம்.

இன்று நாங்கள் நெருக்கடிகளை சிறப்பான முறையில் கையாண்டோம். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கின்றேன். இந்த போட்டியில் சில,சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம் என்று மொனாங்க் பட்டேல் கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 7, 2026, 23:20 [IST]
Other articles published on Feb 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+