Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் டிராவிட் டிவிஸ்ட்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய இளம் வீரர்.. ஸ்ரேயாஸ்க்கு பதவி

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.

Recommended Video

IND vs WI Shubman Gill மோசமான Run Out ! அன்றே கணித்த Sachin *Cricket

இன்றைய போட்டி 50 ஓவர் நீடித்தால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிவ ராத்திரி தான். விராட் கோலி, ரோகித் , ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் இல்லை என்பதால், இளம் வீரர்களுக்கு இந்த தொடர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை, வங்கதேசத்துக்கு எதிராக 3 ஒருநாள் தொடரையும், அந்த அணி இழந்தது.

ஆடுகளம்

ஆடுகளம்

போர்ட் ஆப் ஸ்பெயினில் மழை பெய்து இருப்பதால், ஆடுகளம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் , ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் கூட, இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். மேலும் முதலில் பேட் செய்யும் அணிக்கு பந்தை எதிர்கொள்வதும் சவாலாக இருக்கும்.

டாஸ்

டாஸ்

இதனால், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, எந்த தயக்குமும் இனறி பந்துவீசுவதாக அறிவித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என தெரிவித்தார். வங்கதேசத்துடன் தோல்வி அடைந்தாலும், அதனை பற்றி நினைக்காமல் இன்றைய போட்டியில் 50 ஓவரும் முழுவதுமாக பேட் செய்வோம் என்று கூறினார்.

ஷிகர் தவான் கருத்து

ஷிகர் தவான் கருத்து

இதனைத் தொடர்ந்து பேசிய ஷிகர் தவான், ஆடுகளம் எப்படி இருந்தாலும், கவலை இல்லை. இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம் என்று தெரிவித்தார். இந்திய அணியின் தொடக்க வீரராக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, சூர்ய குமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, தீபக் ஹூடா, 7, அக்சர் பட்டேல், 8, சர்துல் தாக்கூர் 9, முகமது சிராஜ், 10, பிரசித் கிருஷ்ணா, 11, சாஹல்

Story first published: Friday, July 22, 2022, 19:18 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+