Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Recommended Video

INDIA VS WET INDIES T20 | அதிரடி காட்டிய கோலி... இந்தியா அசத்தல் வெற்றி

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் ஓவரில்

முதல் ஓவரில்

இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் அணியின் துவக்க வீரர் லென்டில் சிமோன்ஸ், சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே 2 ரன் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

5 ஓவரில் 60

5 ஓவரில் 60

இதையடுத்து ஜோடி சேர்ந்த இவின் லீவிஸ் பிரன்டன் கிங் ஆகியோர் இந்திய வீரர்கள் பந்து வீச்சை அதிரடியாக அடித்து ஆடினர். லீவிஸ் இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 5 ஒவரிலேயே 60 ரன்களை அந்த அணி கடந்தது.

எல்பிடபிள்யூ முறை

எல்பிடபிள்யூ முறை

இந்நிலையில இவின் லீவிஸ் 17பந்தில் 4சிக்ர்கள் உள்பட 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் வீசிய 6வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதனால் வெஸ்டு இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் இருந்தது.

ஸ்கோர் உயர்வு

ஸ்கோர் உயர்வு

அடுத்து வந்த ஹெட்மயர் நிலைத்து நங்கூரம் போட்டு நின்று வெளுத்துக்கட்டினார். அவருக்கு பக்கபலமாக பிரன்டன் கிங் அதிரடியாக ஆடி அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 100 ரன்களை தொட்டது. பிரன்டன் கிங் 31ரன்களுடன் ஜடேஜா பந்து வீச்சில் ரிசப் பாண்ட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

வெற்றி இலக்கு 208

வெற்றி இலக்கு 208

208 அதன்பின்னர் பொல்லார்ட் 19 பந்தில் 37 ரன்களுடனும், ஹெட்மயர் 41 பந்தில் 56 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது.

கோலி அபாரம்

கோலி அபாரம்

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி 50 பந்தில் 94 ரன்களும் கேஎல் ராகுல் 40 பந்தில் 62 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு வித்திட்டனர். விராட் கோலி இறுதி வரை அதிரடியாக ஆடி களத்தில் இருந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

Story first published: Friday, December 6, 2019, 22:45 [IST]
Other articles published on Dec 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+