For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி – பிளேயிங் லெவன் – பிட்ச் ரிப்போர்ட்

அகமதபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணி போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி கடும் நெருக்கடியில் நாளைய போட்டியில் களமிறங்குகிறது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

2வது ஒருநாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் திரும்பியதால், அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இளம் வீரர் இஷான் கிஷன் வழி விட நேரிடும். இந்திய அணியின் பந்துவீச்சு முதல் ஆட்டத்தில் டாப் கிளாசாக இருந்தது. முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா முதல் போட்டியிலேயே ஜொலித்தார். 2வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானது.

நெருக்கடியில் மே.இ.தீவுகள்

நெருக்கடியில் மே.இ.தீவுகள்

இந்திய அணியில் குறை என்று சொல்ல ஒன்றுமில்லை. விராட் கோலி 8 ரன்களில் கடந்த போட்டியில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். இதனால் அனைவரின் கண்களும் கோலி மீது திரும்பியுள்ளது. இதனிடையே மேற்கிந்திய தீவுகள் அணி மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது. அந்த அணியின் சீனியர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரிய இன்னிங்ஸ்

பெரிய இன்னிங்ஸ்

பொலார்ட், நிக்கோலஸ் பூரான், டேரன் பிராவோ, ஹோல்டர் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இந்தியாவுக்கு நெருக்கடிதர முடியும். குறைந்தபட்சம் அந்த அணி 300 ரன்களையாவது தொட வேண்டும். முதல் ஒருநாள் போட்டியை போல் தான் 2வது போட்டியிலும் ஆடுகளம் செயல்படும். பனிப்பொழிவு இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும்.

Recommended Video

Virat Kohli நிதானம் இல்லாமல் விளையாடுகிறார்.. Sunil Gavaskar எச்சரிக்கை
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

உத்தேச இந்திய அணி 1, ரோகித் சர்மா 2, கே.எல்.ராகுல். 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, தீபக் ஹூடா, 7, வாசிங்டன் சுந்தர். 8, ஷர்துல் தாக்கூர். 9, முகமது சிராஜ் 10, பிரஷித் கிருஷ்ணா. 11, சாஹல்

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி 1, பிரண்டன் கிங் 2. சாய் ஹோப், 3. டேரன் பிராவோ, 4, புருக்ஸ். 5, நிக்கோலஸ் பூரான், 6. பொலார்ட், 7,ஃபெபியன் ஆலன், 8, ஜேசன் ஹோல்டர் , 9, ஓடியன் ஸ்மித். 10, ஆல்சாரி ஜோசப்.11 கேமர் ரோச்,

Story first published: Tuesday, February 8, 2022, 17:01 [IST]
Other articles published on Feb 8, 2022
English summary
India vs West Indies 2nd odi Preview and Playing xi Pitch report இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி – பிளேயிங் லெவன் – பிட்ச் ரிப்போர்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+