Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: இந்திய அணியில் நிதிஷ் குமார் நீக்கம்.. உள்ளே வந்த காஷ்மீர் வீரர்.. சுப்மன் கில் அதிரடி

குவஹாத்தி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றமும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியில் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக காஷ்மீரைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் அறிமுகம் ஆனார்.

குவஹாட்டியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், ஆடுகளத்தில் உள்ள புற்களின் ஈரப்பதம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்பதாலும், மாலையில் பனிப்பொழிவு இருக்கும் என்பதாலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

India vs West Indies 2nd ODI Toss and Playing XI - India Chose to Bowl First Auqib Nabi debuts

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

டாஸ் இழந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பேசுகையில், "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம். ஆனால் இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பேட்டிங்கில் சிறப்பான ஸ்கோரை எடுத்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்போம். எங்கள் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

ஆடுகள நிலவரம் எப்படி?

குவஹாத்தி மைதானத்தின் எல்லைகள் மிகவும் சிறியவை. ஒருபுறம் 61 மீட்டரும், மறுபுறம் 69 மீட்டரும், நேராக 74 மீட்டரும் கொண்ட எல்லைகளைக் கொண்டுள்ளது. செம்மண் ஆடுகளத்தில் நல்ல புற்கள் உள்ளதால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். அதன்பின்னர் பேட்டிங்கிற்கு முழுமையாக சாதகமாக மாறும். சராசரியாக 350 ரன்கள் குவியும் இந்த ஆடுகளத்தில், 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் சேஸிங் செய்யும் இந்திய அணிக்கே அதிக சாதகமான சூழல் நிலவுகிறது.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடி.. சதம் அடித்த வீரர் விலகல்.. என்ன நடந்தது?

இரு அணிகளின் அதிகாரப்பூர்வ பிளேயிங் 11 விவரம்:

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, ஆகிப் நபி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜான் கேம்ப்பெல், கீசி கார்ட்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), அமீர் ஜாங்கு, ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோஸ்டன் சேஸ், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், விட்டல் லாவ்ஸ்.

Story first published: Wednesday, September 30, 2026, 13:41 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+